Tuesday, May 10, 2011

பின்லேடன் கொலை - அஞ்சலி கூட்டத்திற்கு ஜார்ஜ் புஷ் வர மறுப்பு

முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்,நியூயார்க் வர்த்தக மையம் அமைந்திருந்த இடத்தில் நடக்கும் இரங்கல் கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய அதிபர் பாரக் ஒபாமாவின் அழைப்பை நிராகரித்துள்ளதோடு, அமெரிக்க ராணுவம் மர்றும் உளவுத்துறையின் செயலைப் பாராட்டியுள்ளார்.

 பின்லேடன் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து நியூயார்க் வர்த்தக மைய கிரவ்ன்ட்'0'வில் 9/11 தாக்குதலில் உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினர் சிலருடன் சேர்ந்து நாளை நடக்கும் இரங்கல் நிகழ்ச்சியில் முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

இதுகுறித்து முன்னாள் அதிபர் அலுவலக செய்தித் தொடர்பாளர் டேவிட் செர்சர் கூறுகையில், ஒபாமாவின் அழைப்புக்கு முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் நன்றி தெரிவித்துள்ளார். எனினும் அமெரிக்க அதிபர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றபிறகு, ஆரவாரமில்லாத அமைதி வாழ்க்கையை விரும்புவதால் கிரவ்ண்ட் "0" இரங்கல் கூட்டத்தில் கலந்து கொள்ளமாட்டார்" என்று தெரிவித்துள்ளார்.

எனினும், தான் கலந்து கொள்ளாவிட்டாலும் அமெரிக்கர்களுடன் இணைந்து அதைக் கொண்டாடும்படி வாழ்த்து தெரிவித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza