ரிலையன்ஸ் நிறுவனங்களின் அதிபர் முகேஷ் அம்பானியின் 2010-11 வருடத்திய சம்பளமாக 15 கோடி ரூபாய் வழங்கப்பட்டதாக நிறுவன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அம்பானி தனது சம்பள உயர்வை தொடர்ந்து மூன்றாம் ஆண்டாக உயர்த்திக்கொள்ளவில்லை எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் நிறுவனம் தனது ஆண்டறிக்கையில், முகேஷ் அம்பானியின் சென்ற ஆண்டின் சம்பளம் சுமார் 39 கோடி ரூபாய் என பங்குதாரர்களால் நிர்ணயிக்கப்பட்டு இருந்தாலும், அம்பானி தனது சம்பளத்தை உயர்த்தி கொள்ளவில்லை. பெரிய நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகள் தங்கள் வருட சம்பளத்தை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் அரசின் பரவலான கோரிக்கைக்கு செவிசாய்க்கும் நோக்கில் முகேஷ் அம்பானி இவ்வாறு செய்துள்ளதாக நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

0 கருத்துரைகள்:
Post a Comment