Tuesday, May 10, 2011

பாகிஸ்தான் ஐ.எஸ்.எஸ். தலைவர் த‌லைமறைவு?

பாகிஸ்தான் உளவுப்பிரிவான ஐ.எஸ்.ஐ. அமைப்பின் தலைவர் அகமது சுஜா பாஷா, சமீப காலமாக பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகிவந்தார். இவர் இப்போது பாகிஸ்தானிலிருந்து தலைமறைவாகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாகிஸ்தானில் அபோதாபாத்தில் பதுங்கியிருந்த ஒசாமா பின் லேடன், அமெரிக்க சிறப்புப்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட பிறகு, ஐ.எஸ்.ஐ.யின் தோல்வி குறித்து கடும் விமர்சனம் எழுந்தது. பாஷா பதவி விலக வேண்டும் எனவும் எதிர்கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், அமெரிக்காவை சமாதானப்படுத்துவதற்காக, பாஷா அமெரிக்கா சென்றதாக சில தினங்களுக்கு முன் செய்திகள் வெளியாயின. ஆனால் பாஷா அமெரிக்கா போய்ச்சேரவில்லை என தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளன.

அப்படியானால் அவர் எங்கு சென்றார் என்பது மர்மமாக உள்ளது. அவர் தலைமறைவாகிவிட்டதாகவும் சில செய்திகள் தெரிவிக்கின்றன.
 

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza