Saturday, May 14, 2011

அஸ்ஸாம் மீண்டும் காங்கிரஸிற்கு

congress
குவஹாத்தி:அஸ்ஸாம் மாநிலத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் காங்கிரஸ் கட்சி மீண்டும் 3-வது முறையாக ஆட்சியை பிடித்துள்ளது. 126 உறுப்பினர்களைக் கொண்ட அஸ்ஸாம் சட்டமன்றத்தில் கடந்த முறை 53 இடங்களையே பெற்றிருந்த காங்கிரஸ் கட்சி தற்போது எண்ணிக்கையை 80 ஆக உயர்த்தியுள்ளது. அஸ்ஸாம் கணபரிஷத்-பா.ஜ.க கூட்டணிக்கு வெறும் 14 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளது.

கடந்த சட்டசபையில் 24 உறுப்பினர்களை பெற்றிருந்த அஸ்ஸாம் கணபரிஷத் கட்சிக்கு தற்போது ஒன்பது இடங்களே கிடைத்துள்ளன. பா.ஜ.க ஐந்து இடங்களை பெற்றுள்ளது. பத்ருத்தீன் அஜ்மல் தலைமியிலான ஆல் இந்தியா யுனைட்டட் டெமோக்ரேடிக் ஃப்ரண்ட் (AIUDF) ஒன்பது இடங்களையும், போடோலேண்ட் பீப்பிள்ஸ் பார்டி 12 இடங்களையும் கைப்பற்றியுள்ளன.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza