அமெரிக்க சிறப்புப்படை நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டது பின்லாடன தான் என்பதை உறுதி செய்ய, அமெரிக்க சி.ஐ.ஏ.என்னென்ன ஏற்பாடுகள் செய்தது என்பதுபற்றி சில தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அபோதாபாத் நகரில் உள்ள மாளிகையில் பின்லாடன் கொல்லப்பட்டதும், அவரது மனைவிகளில் ஒருவரை கொண்டு அடையாளம் காண்பிக்கப்பட்டது. அதன்பின், இறந்த பின்லாடனின் புகைப்படம் எடுக்கப்பட்டு,அவரது ரத்த மாதிரிகள், திசுக்கள் ஆகியவற்றை சி.ஐ.ஏ.யின் அதிகாரப்பூர்வ டி.என்.ஏ. தொழில்நுட்ப வல்லுனர்கள் சேகரித்தனர்.
மேலும் கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11ல் நடத்தப்பட்ட, அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலுக்கு பின், விசாரணைக்காக கைது செய்யப்பட்ட ஒசாமாவின் மகன்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடமிருந்து ரத்த மாதிரிகள், திசுக்கள் எடுக்கப்பட்டு, முன்பே பாதுகாத்து வைத்திருந்தனர்.
ஒரு ஆண்டுக்கு முன்னர் தான் ஒசாமாவின் சகோதரி ஒருவர், மூளை புற்றுநோயால் அமெரிக்காவின் மாஸிசூசட்ஸ் மாகாணத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு,சிகிச்சை பலனினறி உயிர்ழந்தார். அவரது ரத்த மாதிரிகள், திசுக்கள் ஆகியவையும் பாதுகாப்பாக எடுக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தன .
அவை பின்லாடனின் ரத்த மாதிரிகளுடன் 99.9 சதவீதம் ஒத்துப்போவதால் , கொல்லப்பட்டது பின்லாடன்தான் என்பது உறுதி செய்யப்பட்டது. இதுதவிர அரிசோனா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவக்குழுவினர் இரண்டே மணிநேரத்தில் பின்லாடனில் மரபணு சோதனையினை மேற்கொண்டதாக, டைம் பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது.

0 கருத்துரைகள்:
Post a Comment