பின்லேடனும் அல்காயிதாவின் #2 தலைவருமான அல் ஜவாஹிரியும் ஆறு ஆண்டுகளுக்கு முன்பே பிரிந்து விட்டதாக பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி வால்ஸ்டிரீட் ஜர்னல் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.
ஜவாஹிரி பலவருடங்களுக்கு முன்பே பின்லாடனைவிட்டு ஒதுங்கி விட்டார். மேலும் அல்-காயிதாவுக்கு நிதி வரத்து குறைந்து போனதால்,பின்லேடனை அவர் தவிர்க்க ஆரம்பித்து விட்டார். 1988ம் ஆண்டு அல் காயிதாவை உருவாக்க பின்லேடனுக்கு உதவியாக இருந்தார் ஜவாஹிரி.ஆப்கானிஸ்தானிலும்,பாகிஸ்தானிலும் அல் காயிதா தாக்குதல்களையும் நடத்தியும் வந்தார் என்று அந்த பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரி கூறியுள்ளார்.
இதுகுறித்து அமெரிக்க தீவிரவாத எதிர்ப்புப்பிரிவு அதிகாரி ஒருவர் கூறுகையில்,பின்லாடனுக்கு பலபிரச்சினைகள் இருந்தது உண்மைதான்.ஆனால் ஜவாஹிரியும்,பின்லாடனும் பிரிந்திருந்ததாக எங்களிடம் தகவல் எதுவுமில்லை. அல்காயிதா அமைப்புக்குப் பண வருகை வெகுவாக நின்று போனது உண்மைதான் எனினும் இருவரும் பிரிந்து விட்டார்கள் என்பது நம்பும்படியாக இல்லை. இதுகுறித்த உளவுத் தகவல் எதுவும் எங்களிடம் இல்லை என்றார்.
ஈராக்மீது அமெரிக்கா படையெடுத்தபோது அல் ஜவாஹிரிக்கும், பின்லேனுக்குமிடையே மோதல் ஏற்பட்டதாக தெரிகிறது. 2005 ஆம்ஆண்டில்,ஜோர்டானைச் சேர்ந்த அல்ஜர்காவி தலைமையில் ஈராக் அல் காய்தா உருவான பிறகுதான் பின்லேடனும், ஜவாஹிரியும் பிரிந்ததாக கூறப்படுகிறது.
அல் ஜவாஹிரியால் தனது உயிருக்கு ஆபத்து நேரிடும் என்று அஞ்சியே அபோத்தாபாத்துக்கு பின்லேன் இடம் பெயர்ந்ததாகவும் கருதப்படுகிறது.

0 கருத்துரைகள்:
Post a Comment