எண்ணெய் எரிவாயுவை சிக்கனப்படுத்தும் நோக்கில் டீஸல் இயந்திரம் கொண்ட புதிய வகை நானோ கார்களை டாடா மோட்டார்ஸ் அறிமுகப்படுத்துகிறது. அதன்படி ஒரு லிட்டர் டீஸலுக்கு சுமார் 40 கிமீ வரை கொண்டு செல்லும் இயந்திரங்களை பாஸ்ச் இந்தியா (Bosch India) நிறுவனம் டாடா மோட்டார்ஸுடன் இணைந்து வடிவமைத்து வருகிறது.
இந்த ஆண்டின் இறுதியில் சந்தையிடப்படும் இவ்வகை கார், நடுத்தர மக்களிடையே அதிக வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது சாலையில் இருக்கும் அனைத்து ரக கார்களும் லிட்டருக்கு 8 முதல் 11 கிமீ வரை பயனீட்டாளர்களுக்கு அளிக்கிறது.
இந்நிலையில் பெட்ரோலை விட விலை குறைவான எரிபொருளான டீஸல் ஒரு லிட்டருக்கு சுமார் 40 கி மீ வரை பயன் அளிக்கும் என்பது இந்தியாவில் வாகனங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும். எனினும் நாட்டில் அனைத்து மாநிலங்களிலும், சாலை வசதிகள் மேம்பாடு காணாமல் இருப்பதும், இதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலும் நாட்டின் உற்பத்தி தரத்தை குறைக்கும் என வாகன வல்லுனர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
எனவே, மத்திய மாநில அரசுகள், தேசிய நெடுஞ்சாலைகளின் தரத்தை உயர்த்தவும், புதிய சாலைகளை அமைப்பத்தில் கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

0 கருத்துரைகள்:
Post a Comment