டாக்டராகி ஏழைமக்களுக்கு சேவை செய்வேன் என மாநிலத்தில் 3வது இடம் பிடித்த நெல்லை மாணவி வித்யாசகுந்தலா கூறினார்.
பிளஸ்2 தேர்வில் பாளையங்கோட்டை மகாராஜாநகர் ஜெயேந்திரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி வித்யாசகுந்தலா 1186 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் 3வது இடம் பிடித்துள்ளார்.
பிளஸ்2 தேர்வில் பாளையங்கோட்டை மகாராஜாநகர் ஜெயேந்திரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி வித்யாசகுந்தலா 1186 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் 3வது இடம் பிடித்துள்ளார்.
அவர் பெற்ற மதிப்பெண் விவரம் வருமாறு:
தமிழ்&195, ஆங்கிலம்&193, இயற்பியல்&200,, வேதியியல்&200, உயிரியல்&200, கணிதம்&198. மாநில அளவில் 3வது இடம் பிடித்து சாதனைப்படைத்த மாணவி வித்யாசகுந்தலா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மாநில அளவில் முதல் ரேங்க் கிடைக்கும் என எதிர்பார்த்தேன். ஆனால் 3வது இடம் கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. என் வெற்றிக்கு பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் நண்பர்களே காரணம். டாக்டருக்கு படித்து ஏழை மக்களுக்கு சேவை செய்யவதே எனது லட்சியம். பள்ளி ஆசிரியர்கள் அளித்த பயிற்சியால்தான் என்னால் இந்த வெற்றி பெறமுடிந்தது.
டிவி.பார்த்தால் எனது படிப்பு கெட்டு விடும் என்பதால் வீட்டில் கேபிள் இணைப்பையே எனது பெற்றோர் துண்டித்து விட்டார்கள். எனக்காக பெற்றோரும், சகோதரியும் டிவி பார்ப்பவது இல்லை. டியூசன் பாடங்கள் படிக்கவில்லை.
பள்ளியிலேயே அதற்கேற்றார் போல் பயிற்சிகள் அளித்தனர். ஆசிரியர்கள் தினமும் ஐந்து சிறப்பு தேர்வுகள் நடத்துவார்கள் அந்த தேர்வுகளை எழுதியதால் எனக்கு பாடங்கள் அனைத்தும் அப்படியே மனதில் பதிந்து விட்டது. பள்ளியில் நடத்தப்பட்ட சிறப்பு தேர்வுகள் மிகவும் பயன் உள்ளதாக இருந்தது. இவ்வாறு கூறினார்.
மாணவி வித்யா சகுந்தலாவின் தந்தை பெயர் தனுஷ்கோடி இவர் ஸ்ரீவைகுண்டம் குமரகுருபரர் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். தாயார் பெயர் விஜயாஜானகி சேரன்மகாதேவி ஸ்காட் பாலிடெக்னிக்கில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திவ்யா வெங்கடேஸ்வரி என்ற தங்கையும் உள்ளார்.

0 கருத்துரைகள்:
Post a Comment