Tuesday, May 10, 2011

வாக்கு எண்ணிக்கை - நெல்லையில் 6 தொகுதி அரசு ஊழியர்களுக்கு பயிற்சி!

வாக்குகள் எண்ணுவதுபற்றி நெல்லையில் 6 சட்டமன்ற தொகுதி அரசு ஊழியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஜெயராமன் தலைமையில் பயிற்சி அளிக்கப்பட்டது.’

தமிழக சட்டமன்றத்திற்கு கடந்த மாதம் 13 ஆம் தேதி நடைபெற்ற வாக்குப் பதிவின் வாக்குகள் மே 13ஆம் தேதி எண்ணப்பட உள்ளது. வாக்குகள் எண்ணும் பணியில் ஈடுபட உள்ளோருக்கு திருநெல்வேலி ஆட்சியர் தலைமையில் பயிற்சி நடைபெற்றது.

நெல்லை மாவட்டத்தில் நெல்லை, பாளை, ஆலங்குளம், அம்பை, நாங்குநேரி, ராதாபுரம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நெல்லை அரசு என்ஜினியரிங் கல்லூரியில் நடைபெறும்.

தென்காசி, கடையநல்லூர் குற்றாலம் பராசக்தி கல்லூரியிலும், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில் தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை புளியங்குடி வீராசாமி செட்டியார் கல்லூரியிலும் நடைபெறுகிறது. வாக்குகள் எண்ணும் பணிக்காக ஒரு தொகுதிக்கு 51 ஊழியர்கள் என 10 தொகுதிக்கு 510 ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
 
 நேற்று நெல்லை அரசு என்ஜினியரிங் கல்லூரியில்நடைபெறும். வாக்கு எண்ணிக்கை தொடர்பாக 6 தொகுதிக்கான பயிற்சி ஆட்சியர் ஜெயராமன் தலைமையில்நடந்தது. இதில் 6 தொகுதிகளை சேர்ந்த 306 அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza