
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சர்வ சக்திகளுக்கு சவால் விட்டுக்கொண்டு ஒரு பத்தாண்டு காலம் உஸாமா பின் லேடன் சர்வதேச களத்தில் மறக்க முடியாத மனிதராக திகழ்ந்தார். 2001 செப்டம்பர் 11-ஆம் தேதி உலக வர்த்தக மையம் தாக்குதலுக்கு பிறகு அமெரிக்காவின் நம்பர் 1 எதிரியாக பிரகடனப்படுத்தப்பட்ட போராளியாக உஸாமா மாறினார்.அமெரிக்காவும், அதன் கூட்டணி நாடுகளும் அனைத்து சக்திகளையும் பிரயோகித்தும் உஸாமாவையோ அவருடைய முக்கிய தோழர்களையோ கண்டுபிடிக்க இயலவில்லை.
அமெரிக்காவிற்கும், அதன் கூட்டணி நாடுகளுக்கும் எதிராக சர்வதேச அளவில் நடந்துவரும் வாழ்வா? சாவா? போராட்டத்தில் உலக மக்களின் அனுதாபமும், ஆதரவும் போராளிகளுக்கு தான் என்பதை உச்ச பட்ச குரலில் பிரகடனப்படுத்திய அனுபவமாக மாறியது உஸாமாவின் பங்கு.இறுதியாக நேற்று முன்தினம் இரவில் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா பத்தாண்டு கால நாடகத்தின் முடிவுரையாக உஸாமா கொல்லப்பட்ட செய்தியை பிரகடனப்படுத்தினார்.
பயங்கரவாதத்திற்கெதிரான போரில் பெரும் வெற்றியாக உஸாமா கொல்லப்பட்டதை பாரக் ஒபாமாவும், அமெரிக்க ஊடகங்களும் வர்ணிக்கின்றனர்.அமெரிக்காவின் அபிமான சின்னமான உலக வர்த்தக மையத்தை தகர்த்து எறிந்து ஏகாதிபத்தியத்திற்கு மிக கடுமையான பதிலடியைக் கொடுத்த போராளியாக உஸாமாவை குறித்து பலரும் கருதுகிறார்கள்.
இத்தாக்குதல் அமெரிக்காவிற்கு எப்பொழுதும் மாறாத வடு என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை .ஆனால், இவ்வேளையில் உலக சமூகத்தின் முன்னால் எழுகின்ற ஒரு கேள்வி என்னவெனில் ஏன் சமகாலத்தில் தங்கள் உயிரையும் அர்ப்பணித்துக் கொண்டு இறுதிவரை போராட ஆயிரக்கணக்கான மக்கள் தயாராகின்றார்கள்? என்பது தான்.
ஏகாதிபத்தியத்தின் மனிதகுலத்திற்கு எதிரான கொள்கைகளுக்கு எதிராக இயற்கையாகவே எழும் பழிவாங்கும் உணர்வு தான் இங்கு போராட்டமாக வெடித்துள்ளதை நாம் மறந்துவிடக்கூடாது. போராளி இயக்கங்களை கொடூரமானவர்களாக சித்தரிப்பதற்கு போதுமான ஊடக பலம் ஏகாதிபத்திய சக்திகளிடம் உள்ளதை மறுக்கவில்லை.அவர்களை குருதி வெள்ளத்தில் மூழ்கடித்து கொலை செய்யும் ஆயுத பலமும் அவர்களிடமுள்ளது. உஸாமா பின் லேடனை வேட்டையாடுகிறோம் எனக்கூறிக் கொண்டு ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலும் லட்சக்கணக்கான நிரபராதிகளை ஏகாதிபத்திய சக்திகள் கொன்று குவித்தன.
இத்தகைய இரத்தக்களரிகள் ஏகாதிபத்தியம் நிகழ்த்திவரும் கொடூரங்களுக்கு ஆதாரங்களாக திகழ்கின்றன.உஸாமா பின்லேடன் கொலை செய்யப்பட்டதன் மூலம் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டம் முடிவுக்கு வந்துவிடாது .
இது அமெரிக்காவிற்கும் தெரியும். காரணம், அநீதிகளின் மீது கட்டியெழுப்பப்பட்ட ஏகாதிபத்தியம் என்ற உலக ஒழுங்கிற்கு எதிரான போராட்டம் தான் இங்கு நடைபெற்றுவருகிறது. இரத்த சாட்சியாக மாறிய உஸாமா அந்த போராட்டத்தின் ஒரு சின்னம் மட்டுமே!

0 கருத்துரைகள்:
Post a Comment