
லண்டன்:இரண்டாவது உலகப்போருக்கு பிறகு அமெரிக்காவின் வெளிநாட்டுக் கொள்கையில் முக்கிய ஆயுதமாக மாறியது தனிநபர் கொலைகள். தங்களுக்கு வேண்டாத தலைவர்களையும், ஆட்சியாளர்களையும் கொலை செய்வதற்காக விஷம் உள்பட பல்வேறு வகையான ஆயுதங்களை உபயோகித்தது.அமெரிக்காவின் உளவுத்துறையான சி.ஐ.ஏ.
இதற்காகவே தனியாக ஒரு பயிற்சி மையத்தை அமெரிக்காவின் போர்ட் ப்ராக்கில் சி.ஐ.ஏ நிர்மாணித்திருந்தது. சி.ஐ.ஏவின் இந்த பயிற்சி மையத்திற்கு கட்டுப்பாட்டை ஏற்படுத்த முயன்றதால் அமெரிக்காவின் முன்னாள் அதிபரான ஜான்.எஃப்.கென்னடி கொலை செய்யப்பட்டார் என பெரும்பாலோர் கருதுகின்றனர்.”நீங்கள் ரஷ்யாவுடனோ அல்லது கம்யூனிஸ்டுகளுடனோ நெருங்கும் விதமாக பேச்சுவார்த்தை நடத்தினால் கொலை செய்யப்படுவதற்கான வாய்ப்பு அதிகம்” என ஜான்.எஃப்.கென்னடியின் சகோதரர் ராபர்ட்டிற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையை ஜான்.எஃப்.கென்னடியின் ப்ரஸ் செகரட்டரியாக பணியாற்றிய பியர் ஸாலிங்கர் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.
1960-க்கும் 1965-க்குமிடையே பல தடவை க்யூபா நாட்டின் அதிபராக பதவி வகித்த பிடல் காஸ்ட்ரோவை கொலை செய்ய சி.ஐ.ஏ முயன்றது. பிரபல வரலாற்றாய்வாளரான வில்லியம் ப்ளம்மின் ஆய்வின்படி அரசியல் தலைவர்களை கொலை செய்ய அமெரிக்கா 42 தடவைகளாவது முயன்றுள்ளது.
கடந்த அரை நூற்றாண்டாக அமெரிக்காவால் கொலைச்செய்யப்பட்ட முக்கிய தலைவர்கள்
1957 – கார்லோஸ் அர்மஸ் – குவாட்டிமாலா
1960 – பாட்ரிஸ் லுமும்பா – காங்கோ
1961 – ரஃபேல் த்ருஹியோ – டொமினிக் குடியர
1963 – என்கோடின் டியம் – வியட்நாம்
1967 – சேகுவாரா – பொலிவியா
1970 – சால்வடோர் அயந்தே – சிலி
1981 – உமர் டோரியோ – பனாமா
1986 – கத்தாஃபியின் வளர்ப்பு மகள் ஹன்னா கத்தாஃபி (கத்தாஃபியை கொலைச்செய்ய நடந்த குண்டுவீச்சில் ஹன்னா கொல்லப்பட்டார்) – லிபியா
2000 – அப்துல்லாஹ் அவாத் – லிபியா
2006 – சதாம் ஹுஸைன் – ஈராக்
2011 - கத்தாஃபியின் மகன் ஸைஃபுல் அரப் (இவருடன் கத்தாஃபியின் 3 பேர குழந்தைகளும் கொல்லப்பட்டனர்) – லிபியா
2011- மே 1- உஸாமா பின் லேடன்.

0 கருத்துரைகள்:
Post a Comment