Monday, May 9, 2011

+2 தேர்ச்சி விகிதம் : மாணவர்கள் 82.3% மாணவிகள் 89%

இந்த ஆண்டு +2தேர்வில் மாணவிகள் 89%,மாணவர்கள் 82.3% தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒட்டுமொத்தமாக 85.9% மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த ஆண்டு மாணவ, மாணவியரின் தேர்ச்சி விகிதம் 85.15% ஆகும்.

ஆண்டுதோறும் மாணவர்களைவிட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்று வருகின்றனர். அதேபோல் இந்த ஆண்டும் மாணவர்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு மாணவிகள் முதலிடத்தை தொடர்ந்து தக்க வைத்துள்ளனர்.


மாநில அளவில் ஓசூர் மாணவி கே.ரேகா மாநிலத்திலேயே முதல் இடத்தைப் பிடித்து, அதிலும் மாணவர்களைப் பின்னுக்குத் தள்ளியுள்ளனர். உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள்,தமிழக சட்டமன்ற தேர்தல் ஆகியவற்றிற்கு இடையேயும் ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டைவிட இந்தஆண்டு சற்று அதிகரித்துள்ளது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza