Monday, May 9, 2011

+2 தேர்வில் 200-க்கு 200 மதிப்பெண் பெற்ற மாணவ மணிகள்

தமிழகத்தில் +2 தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியானது.  1890 மையங்களில் நடைபெற்ற  இவ்வருட +2 தேர்வில் மொத்தம் 7 லட்சத்து 81 ஆயிரத்து 395 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினார்கள்.  இதில் 6 லட்சத்து 15 ஆயிரத்து 593 பேர் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். தேர்ச்சி சதவீதம் 85.9 ஆகும். வழமைபோல் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  மாணவர்களின் தேர்ச்சி 82.3 சதவீதமாகவும் மாணவிகளின் தேர்ச்சி 89 சதவீதமாகவும் இவ்வருடம் இருந்தது.   கணிதப் பாடத்தில்தான் அதிகமான பேர் 200-க்கு 200 மதிப்பெண் பெற்றிருக்கின்றனர்.

200க்கு 200 எடுத்த மாணவ மணிகளின் விபரம்


அக்கவுண்டன்சி  1320 பேர்

வேதியியல்  1243 பேர்

வர்த்தகம்  1167 பேர்

இயற்பியல்  646 பேர்

உயிரியல்   615 பேர்

பிசினெஸ் கணிதம்  358 பேர்

கம்ப்யூட்டர் சயின்ஸ் 223 பேர்

தாவரவியல் 4 பேர்

கணிதம்  2720 பேர்

விலங்கியல் பாடத்தில் யாரும் இவ்வருடம்  200 மதிப்பெண்கள் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza