Wednesday, January 12, 2011

வரலாற்றுச சிறப்புமிக்க ஹோட்டல் இடிப்பு: இஸ்ரேலுக்கு ஐ.நா கண்டனம்

ஐ.நா,ஜன:சட்டவிரோதமாக யூத குடியிருப்புகளை கட்டுவதற்காக வரலாற்றுச் சிறப்புமிக்க ஹோட்டலை இடித்த இஸ்ரேலின் நடவடிக்கைக்கு ஐ.நா கண்டனம் தெரிவித்துள்ளது.

கிழக்கு ஜெருசலமில் அரபு பிரதேசத்தில் அமைந்துள்ள ஷெப்பர்டு ஹோட்டலை புல்டோசர்களால் நேற்று முன்தினம் இடித்துத் தள்ளியிருந்தது.

இஸ்ரேல்-ஃபலஸ்தீன் சமாதான பேச்சுவார்த்தையை இது பெரிதும் பாதிக்குமென ஐ.நாவின் பொதுச்செயலாளர் பான் கீ மூன் தெரிவித்தார்.

சட்டவிரோத யூத வீடுகளின் கட்டுமானப் பணிகளை இஸ்ரேல் நிறுத்தவேண்டுமென அவர் கோரிக்கைவிடுத்தார். சட்டவிரோதமாக யூத குடியிருப்புகளை கட்டிவரும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இச்சூழலில் இந்நடவடிக்கை முற்றிலும் கண்டனத்திற்குரியது என பான் கீ மூன் தெரிவித்தார்.
செய்தி:பாலைவனதூது 

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza