ரியாத்,ஜன.12:ஒசாமாவின் மருமகன் உட்பட 47 அல்கொய்தா தீவிரவாதிகளின் பட்டியலை சவுதி அரசு சர்வதேச போலீசிடம் ஒப்படைத்துள்ளது.
47 நபர்கள் அடங்கிய அந்த பட்டியலில் ஒசாமாவின் மருமகன் முஹமது சலீம் பரிகான் 39-வது நபராக குறிப்பிடப்பட்டுள்ளதாக அரப் லீக் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.
பரிகான் ஒசாமாவின் பாதுகாப்புக்கான நபராக இருந்துள்ளார் எனவும், அல்கொய்தா தலைவரின் மகள் பாத்திமாவை திருமணம் செய்து ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் உள்ள குகைகளில் சில மாதங்கள் தங்கிவுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. .
பரிகான் 1977-ம் ஆண்டு சவூதியிலிருந்து வெளியேறி ஆப்கானிஸ்தானில் அல்கொய்தாவில் இணைந்து அல்கொய்தாவின் ஆயுதப் பிரிவில் கமாண்டராகவும் செயலாற்றிவுள்ளார் எனவும் அதில தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவுதி உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளரான மேஜர் ஜெனெரல் மன்சூர் அல் துர்கி தீவிரவாதிப் பட்டியலில் உள்ள 47 நபர்களும் ஏமன் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நாடுகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவித்தார்.
சவுதிக்குள் ஒரு தீவிரவாதக் குழுவை உருவாக்குவதும் அதில் சவுதியைச் சார்ந்தவர்களுக்கு பயிற்சி கொடுப்பதும் அல்கொய்தாவின் முக்கிய இலக்காக இருந்துள்ளது என பிரிட்டிஷ் டெய்லி நாளிதழை மேற்கோள்காட்டி கூறியுள்ளார்.
"நாங்கள் இந்த தீவிரவாதப் பட்டியலை சர்வதேச போலிசாரிடம் கொடுத்து அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுப்போம்" என்றும் அவர் கூறினார்.
47 நபர்கள் அடங்கிய இந்த பட்டியலில் 16 ஏமன் நாட்டிலும் 27 நபர்கள் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிகளில் பரவி செயல்படுவதாகவும் 4 நபர்கள் ஈராக் பகுதிகளில் செயல்படுவதாகவும் நம்பப்படுவதாக மேஜர் ஜெனெரல் மன்சூர் அல் துர்கி கூறினார்.
செய்தி:பாலைவனதூது
0 கருத்துரைகள்:
Post a Comment