ராமர் கோவில் பிரச்னையில் ஆர்.எஸ்.எஸ்ஸின் தலையீடு ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு சொத்து சேர்க்கும் முயற்சியே என்று அனைத்து இந்திய ஹிந்து மகாசபா குற்றம் சாட்டியுள்ளது.
செய்தியாளர்களிடம் பேசிய ஹிந்து மகாசபையின் தேசிய செய்தி தொடர்பாளர் ஜே.பி.சத்ரியா கூறுகையில் '' அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் உரிமை ஹிந்தி மகாசபைக்கும், நிர்மோஹி அகாரா அமைப்புக்கும் மட்டுமே உள்ளது என்றும் ஆர்.எஸ்.எஸ் சொத்துக்களை கைப்பற்றும் முயற்சியில் இந்த பிரச்னையில் தலையிடுகிறது என்றும் குற்றம்சாட்டினார்.
ஆர்.எஸ்.எஸ்ஸை தோற்றுவித்தததே ஹிந்துக்களின் தற்போதைய அவலநிலை, ஆர்.எஸ்.எஸ் ஹிந்துக்களின் நலனில் அக்கறை கொண்டது போல் பாசாங்கு செய்கிறது ஆரம்பம் முதலே ஆர்.எஸ்.எஸ் அமைப்பு நேர்மையற்ற முறையிலும், நம்பிக்கை துரோகியாகவும் செயல்பட்டு வருகிறது என்றும் மேலும் அவர் தெரிவித்தார்.
செய்தி:இந்நேரம்
0 கருத்துரைகள்:
Post a Comment