மும்பை,நவ.1:முன்னேற்றமடைந்த தொழில்நுட்பமும், உலகத்தையே சில நிமிடங்களில் அழிக்ககூடிய ஆயுதங்களும் இன்று நம்மிடம் உள்ள நிலையில், இஸ்லாத்தின் மூலம் உலகத்தில் அமைதியை உருவாக்குவது நமது பெரிய சவாலாக விளங்குவதாக மஸ்ஜித்-எ-மக்கத்துல் ஹரம் தலைமை இமாமும் மூத்த உலமாவுமான ஷைக் அல்-சுரைம் கூறியுள்ளார்.
கடந்த வாரம் மும்பையில் நடந்த பீஸ் கண்காட்சியில் கலந்து கொண்ட ஷைக், ஜும்ஆ தொழுகையும் நடத்தி வைத்தார். இதில் ஆயிரக்கணக்கான மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
ஜும்ஆ சொற்பொழிவில் அவர் கூறியதாவது, "நாம் மற்ற சமூகத்தினரை விட தனிப்பட்டவர்கள் என்றும், இஸ்லாம் கற்றுக்கொடுக்கும் அன்பு, சகோதரத்துவம் மற்றும் நீதி நம்மிடமே உள்ளதாகவும், நம் சமுதாயத்தை போலவும், நம் இஸ்லாத்தை போலவும் உலகத்தில் வேறு எதுவும் கிடையாது" என்று தெரிவித்தார்.
இறைத்தூதர் ரசூல்(ஸல்..,) அவர்களின் வாழ்க்கையை மேற்கோள் காட்டி உரையாற்றிய ஷைக், வெறும் போர்கள் சூழ்ந்த அக்காலத்தில் இஸ்லாத்தில் மூலம் அன்பையும், சகோதரத்துவத்தையும் மேம்படுத்தி ரசூல்(ஸல்..,) அவர்கள் உலகத்தில் அமைதியை மலரச் செய்தார்கள் என்பதாகத் தெரிவித்தார்.
ஈமானைப் பற்றிக்கொண்டு அந்த ஈமானின் மூலம் அல்லாஹ்வை துதிச் செய்யுமாறும் ஷைக் மக்களை கேட்டுக்கொண்டார். ஆயுதங்களுக்கு பதிலாக நல்ல பண்பினையும், பாசத்தையும் பரப்புமாறும் ஷைக் உரையாற்றினார். நம் சமூகம் பல பிரிவுகளாக பிரிந்திருக்கும் காரணத்தினால், நம்மிடம் ஒற்றுமை என்பது குறைவு என்பதாக ஷைக் இறுதியில் தெரிவித்தார்.

twocircles.net
0 கருத்துரைகள்:
Post a Comment