Friday, July 20, 2012

மீனவர் படுகொலை கண்டித்து சென்னையில் அமெரிக்க தூதரகம் முற்றுகை! SDPI கட்சியினர் கைது!


sdpi protest
சென்னை தமிழக மீனவர் அமெரிக்க கடற்படையால் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும், இந்திய சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு வேண்டும் என்று கூறிய ஒபாமாவின் அத்துமீறலை கண்டித்தும் சென்னையில் இன்று எஸ்.டி.பி.ஐ கட்சியினர் அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
எஸ்.டி.பி.ஐ கட்சியினர் மாநில செயலாளர் சையது அலி தலைமையில் அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்கள் ரத்தினம் அண்ணாச்சி, ஜாகிர் உசேன் மற்றும் தென் சென்னை மாவட்ட தலைவர் உசேன், வட சென்னை மாவட்ட தலைவர் அமீர் ஹம்சா, திருவள்ளூர் மாவட்ட தலைவர் புஹாரி, காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் பிலால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அமெரிக்காவிற்கு எதிராக கோஷங்கள் எழுப்பியதுடன், துப்பாக்கிச்சூடு செய்த அமெரிக்க படையினர் கைது செய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினர். முற்றுகையிட்ட எஸ்.டி.பி.ஐ கட்சியினரை போலிசார் கைது செய்தனர்.

Thursday, July 19, 2012

ரமலானை வரவேற்போம்!!!


ரமலானை வரவேற்போம்!!!புனிதமும், கண்ணியமும், ரஹ்மத்தும் நிறைந்த மாதமான ரமலான் நம்மை நெருங்கி கொண்டிருக்கிறது. ஈமான் கொண்ட அனைவரும் இந்த மாதத்தை எதிர்நோக்கியவாறு தங்களுடைய 5 கடமைகளில் ஒன்றான நோன்பை நிறைவேற்றி அல்லாஹ்வின் பொருத்தத்தை அடைய ஆவலாகவும், சந்தோஷமாகவும் உள்ளனர்.

ஏனென்றால் நோன்பு முஸ்லிம்களின் உள்ளங்களிலும், வாழ்க்கையிலும் நல்லதொரு மாற்றங்களை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் அடுத்து வருகின்ற பதினோரு மாதங்களுக்குக்கான ஒரு பயிற்சியாகவும் உள்ளது. மேலும் முஸ்லிம்களுக்கு இது ஒருவசந்த காலம் என்று கூறும் அளவுக்கு நன்மைகள் பொதிந்து கிடக்கின்றன.

இறைவனை நினைவு கூர்தல், தர்மம் செய்தல், நோன்பு நோற்றல், ஐவேளை தொழுதல், இரவுநேர வணக்கங்கள், சொல்-செயல்-எண்ணங்கள் என்று அனைத்திலும் இறையச்சத்தை பேணுதல் என்று ஒரு அமைதியான, நிம்மதியான சூழலை ரமலான் நம்மிடையே ஏற்படுத்தி விடுகின்றது. ரமலானின் முழு பலனையும் அடையவேண்டும் என்பதில் எந்த ஒரு முஸ்லீமுக்கும் இரு வேறு கருத்துக்கள் இருக்க முடியாது.

பெரம்பலூரில் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் சார்பாக போராட்டம்


 பெரம்பலூர் மாவட்டத்தில் வயதைக் காரணம் காட்டி முஸ்லிம் பெண்ணின் திருமணத்தை தடுத்து பெற்றோரை கைது செய்த மாவட்ட ஆட்சியரின் அதிகார துஷ் பிரயோகத்தை கண்டித்தும் முஸ்லிம் தனியார் சட்டத்தில் அத்துமீறி தலையிட்டு இந்திய நீதி மன்றத்தை அவமதித்து முஸ்லிம் திருமணத்தை தடுத்து நிறுத்திய பெரம்பலூர் மாவட்ட ஆட்சி தலைவரை கண்டித்தும், இம்மாவட்ட காவல் துறையை கண்டித்தும் முஸ்லிம் இயக்கங்கள் ஒன்றினைந்து நடத்திய போராட்டம் பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு இன்று 17-07-2012 அன்று நடைபெற்றது. 
 
ஜமாத்துல் உலமா தலைவர் அப்துல் ரஹ்மான் ஆலிம் தலைமையில் ,பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா தலைவர் இஸ்மாயில் ,இந்திய தௌஹீத் ஜமாஅத் தலைவர் S .M பாக்கர் ,த மு மு க மூத்த தலைவர் ஹைதர் அலி அ, SDPI தமிழ் மாநில தலைவர் K.K.S.M.தெஹ்லான் பாகவி , ,இந்திய தேசிய லீக் இனாயதுல்லாஹ் ,தேசிய லீக் பசீர் அஹ்மத் ,சுன்னத்துவல் ஐக்கிய பேரவை தலைவர் மேலை நாசர் ,மறு மலர்ச்சி முஸ்லிம் லீக் உமர் பாருக் ,வெல்பர் பார்ட்டி ஆப் இந்தியா சிங்கந்தர் ,தேசிய லீக் பசீர் அஹ்மத் ,ஆல் இந்தியா மில்லி கவுன்சில் அமீர் அலி ,தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம் முஹம்மத் மன்சூர் ,இஸ்லாமிய விழிபுணர்வு கழகம் முஹம்மத் கான் பாக்கவி மேலும் பல இயக்க தலைவர்களும் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.

Tuesday, July 17, 2012

போலீஸ் கஸ்டடி மரணம்: காஜா யூனுஸின் குடும்பத்தினருக்கு இழப்பீடு கிடைக்கவில்லை!

Khwaja Yunus
மும்பை:2002-ஆம் ஆண்ட் காட்கோபர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு போலீஸ் கஸ்டடியில் கொலைச் செய்யப்பட்ட காஜா யூனுஸின் குடும்பத்தினருக்கு மஹராஷ்ட்ரா அரசு இதுவரை இழப்பீட்டை வழங்கவில்லை. மும்பை உயர்நீதிமன்றம் 2012 ஏப்ரல் 10-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்படி 17 லட்சம் ரூபாய் காஜா யூனுஸின் குடும்பத்தினருக்கு வழங்கியிருக்க வேண்டும்.
இதுத்தொடர்பாக மஹராஷ்ட்ரா அரசின் உள்துறைக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக யூனுஸின் தாயார் ஆஸியா பேகத்தின் வழக்கறிஞர் மிஹிர் தேசாய் தெரிவித்துள்ளார்.
காஜா யூனுஸ் ஆசியா பேகத்தின் ஒரே மகன் ஆவார். இவர் துபாயில் சாஃப்ட்வெயர் எஞ்சீனியராக பணியாற்றி வந்தவர். விடுமுறையில் ஊருக்கு செல்லும் பொழுது அநியாயமாக காட்கோபர் குண்டுவெடிப்பு வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் இவர் போலீஸ் காவலில் வைத்து கொலைச் செய்யப்பட்டார்

துபாயில் அமெரிக்க கப்பற்படையால் சுட்டுக் கொலைச் செய்யப்பட்ட மீனவர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம்: ஜெ.அறிவிப்பு!

fisherman sekar
சென்னை:ஐக்கிய அரபு அமீரகத்தின் மாகாணங்களில் ஒன்றான துபாயில் மீன்பிடி தொழிலுக்கு சென்ற தமிழரான ஏ.சேகர் அமெரிக்க கப்பற்படையின் அநீதிமான துப்பாக்கிச்சூட்டில் பலியானார். அவருடன் பயணித்த 3 பேர் காயமுற்றனர்.
இந்நிலையில் துப்பாக்கிச்சூட்டில் கொலைச் செய்யப்பட்ட மீனவர் ஏ.சேகரின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
‘துபாய் நாட்டில் உள்ள ஜெபல் அலி துறைமுகம் அருகில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அமெரிக்க கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஏ. சேகர் என்ற மீனவர் உயிரிழந்தார் என்றும், மூன்று மீனவர்கள் காயமடைந்தனர் என்றும் செய்தி கேட்டு நான் மிகுந்த வருத்தமுற்றேன்.
இந்தத் துயரச் சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு, மீனவர்களுக்கு உரிய நிவாரணம் அளிக்கப்பட வேண்டும் என்று பிரதமருக்கு நான் கடிதம் எழுதியுள்ளேன்.

துபாய்:அமெரிக்க கப்பற்படையின் வெறிச்செயல் – துப்பாக்கிச்சூட்டில் தமிழர் பலி!


Indian(Tamil)  fisherman killed in US Navy firing off Dubaiதுபாய்:அமெரிக்க கப்பல் ஒன்று ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளிப்புற கடற்பகுதியில் வைத்து மீன்பிடி படகு மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தமிழகத்தைச் சார்ந்த மீனவர் பலியானார். 3 பேருக்கு காயம் ஏற்பட்டது. 

ராமநாதபுரத்தைச் சார்ந்த சேகர்(வயது 26) என்பவர் அமெரிக்க கப்பற்படையின் அநியாய துப்பாக்கிச்சூட்டில் பலியான நபர் ஆவார். மணிகண்டன், முத்துக்கண்ணன் ஆகியோருக்கு துப்பாக்கிச்சூட்டில் காயம் ஏற்பட்டது.

பாரசீக வளைகுடாவின் 30 கடல் மைல் தொலைவில் உள்ள ஜெபல் அலி கடல் பகுதியில் வைத்து துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. மீன் பிடித்தலுக்கு உபயோகிக்கும் 9 மீட்டர் அகலம் கொண்ட 3 எஞ்சின்களை உடைய ஐக்கிய அரபு அமீரகத்தைச் சார்ந்த படகு மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

Monday, July 16, 2012

அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை விடுதலை செய்யக்கோரி நாடுதழுவிய பிரச்சாரம்


புதுடெல்லி: எவ்வித குற்றமும் நிரூபணமாகாமல் நாடு முழுவதும் பல வருடங்களாக சிறையில் வாடும் முஸ்லிம் இளைஞர்களை விடுதலை செய்யப்பட‌ வேண்டுமென்பதை வலியுறுத்தி தேசிய அளவில் மாபெரும் பிரச்சாரத்தை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மேற்கொள்ள இருக்கின்றது. இந்த மாதம் 7 மற்றும் 8 ஆகிய இரு தேதிகளில் நடைபெற்ற பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய செயற்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது. பல்வேறு விதமான கருத்தாலோசனைகளும், விவாதங்களும் இச்செயற்குழு கூட்டத்தில் நடைபெற்றது.

சமீப காலமாக வெளிவந்து கொண்டிருக்கும் செய்திகளை உற்று நோக்கும்போது இந்தியாவில் பல சிறைச்சாலைகளில் பல முஸ்லிம் இளைஞர்கள் பல வருடங்களாக விசாரணைக்கைதிகளாகவே இருந்து வருகின்றனர். மேலும் அவர்களது வழக்குகள் தொடர்பான் விசாரணைகள் காலம் தேதி குறிப்பிடப்படாமல் நீதிமன்றங்களால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது தெரியவருகிறது. அஸ்ஸாம் மாநிலத்தை தவிர்த்து பிற மாநிலங்களில் முஸ்லிம்களின் சதவிகிதத்தை விட அம்மாநில சிறைச்சாலைகளில் அடைப்பட்டிருக்கும் முஸ்லிம்களின் சதவிகிதம் அதிகமாக இருக்கிறது என்ற அதிர்ச்சி தகவலை ஒரு கணக்கெடுப்பு வெளியிட்டுள்ளது. குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு எதிராக உரிய ஆதாரங்கள் இல்லாதிருந்தும் யு.ஏ.பி.ஏ விதியை காரணம் காட்டி இன்றுவரை அவர்களுக்கு ஜாமின் மறுக்கப்பட்டு வருகிறது. இப்பேற்பட்ட அப்பாவி இளைஞர்கள் சிறையில் இருந்து விடுபட வேண்டுமென்றால் சமூக ஆர்வலர்களும், தேசத்தின் மீது அக்கறை கொண்ட ஒவ்வொருவரும் இதற்காக முன்வர வேண்டும்.

Wednesday, July 11, 2012

பத்தாம் வகுப்பு பொது தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டு மற்றும் பரிசளிப்பு விழா

புதுவலசை : நமதூர் அரபி ஒலியுல்லாஹ்வின் பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டில் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளை ஊக்கப்படுத்தும் விதமாகவும், பாராட்டும் முகமாகவும் சிறப்பான பரிசளிப்பு விழா நமதூர் மதரஸா வளாகத்தில் நடைபெற்றது. கடந்த 12 வருடமாக EPMA (Emirates Puduvalasai Muslim Assosiation) அமீரகத்தில் செயல்பட்டுவரும் நமதூர் வாசிகளுக்கான அமைப்பின் மூலமாக பரிசுகளும், பதக்கங்களும் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் இந்த வருடம் சற்று சிறப்பாக EPMA அமைப்புடன், தாசின் அறக்கட்டளையும் மற்றும் நமதூர் முஸ்லிம் தர்ப பரிபால சபையும் இணைந்து முப்பெரும் விழாவாக வெகு விமர்செய்யாக பரிசளிப்பு விழா நடைபெற்றது.

இதில் முஸ்லிம் தர்ம பரிபாலன சபைகளின் .கவுரவ தலைவர் ஜனாப். தையூப் கான் அவர்கள் தலைமை வகிக்க, ஜமாஅத் நிர்வாகிகள் முன்னிலை வகிக்க பரிசளிப்பு விழா சிறப்பாக துவங்கியது. இதில் தாசின் அறக்கட்டளையின் நிறுவனர் ஜனாப். தாசின், பள்ளிகளின் தாளாளர் ஜனாப். லியாகத் அலி கான், EPMA-வின் செயலாளர் ஜனாப். ஜாபிர் ஹுசைன், நமது ஊராட்சிகளின் செயல் தலைவர் ஜனாப். ஜபருல்லாஹ் கான், பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் ஜனாப். சிக்கந்தர் சீதக்காதி மறைக்காயர், மற்றும் திரு. ஜெயச்சந்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

Monday, July 9, 2012

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம்

ஜூலை - 07 புதுவலசையில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. முஸ்லிம் தர்ம பரிபாலன சபை தலைவர் ஜனாப். அஹமது கபீர், செயலாளர் ஜகுபர் சாதிக் மற்றும் புதுவலசை ஃபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நிர்வாகிகள் ஆகியோர் துவங்கி வைத்தனர். இலவச கண் பரிசோதனையில் புதுவலசை, பனைக்குளம், தேர்போகி போன்ற கிராமங்களில் இருந்து பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு பயன்பெற்றனர்.  


                                    

பெரியப்பட்டிணத்தில் நடந்தது என்ன? – தூது நிருபரின் நேரடி அலசல்!


நேற்று முன்தினம் மதியம் கலைஞர் டி.வியில் பரபரப்பான ஃப்ளாஷ் நியூஸ் ஓடிக்கொண்டிருந்தது கண்டு பலரும் அதிர்ச்சியடைந்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பெரியப்பட்டிணம் கடலோர கிராமத்தில் வெளிமாநிலங்களில் இருந்து வந்து பயிற்சி பெற்ற தீவிரவாதிகளை போலீஸ் பிடித்துச் சென்றது என்பதுதான் அந்த செய்தியின் சாராம்சம். இச்செய்தி பல்வேறு மீடியாக்களில் பலவிதமாக வெளியாகியிருந்தது.

அமைதிப் பூங்காவாக திகழும் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக மீடியாக்களில் வெளியான இச்செய்தியின் உண்மை நிலைக்குறித்து அறிய தூது சார்பாக விசாரணையை துவக்கினோம்.

இதுத்தொடர்பாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் ராமநாதபுரம் மாவட்ட தலைவர் காலித் அவர்களை நாம் தொடர்பு கொண்டோம். அப்பொழுது அவர் கூறியது: “வலிமையான இந்திய தேசத்தை உருவாக்கவேண்டும் என்ற அடிப்படையில் ‘ஆரோக்கியமான சமுதாயம்! ஆரோக்கியமான தேசம்!’ என்ற கொள்கையை வகுத்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பல்வேறு உடற்பயிற்சிகள், சுயமுன்னேற்றம், நல்லொழுக்க பயிற்சிகளை அளித்து வருகிறது. இப்பயிற்சிகள் வெளிப்படையாக அதுவும் காவல்துறையினருக்கு தெரிந்தே நடைபெறுவதால் இதில் ரகசியம் எதுவும் இல்லை.

Dua For Gaza