Wednesday, August 3, 2011

முஸ்லிம்களுக்கு எதிரான கட்டுரை:சுப்ரமணிய சுவாமியின் மீது வழக்கு தொடர சிறுபான்மை கமிஷன் முடிவு

 
subramaniyaswamyபுதுடெல்லி:கடுமையான வகுப்புவாத வெறியுடன் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டுரை எழுதிய சுப்ரமணியசுவாமி மீது வழக்கு தொடர தேசிய சிறுபான்மை கமிஷன் முடிவுச்செய்துள்ளது.

மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் டி.என்.எ பத்திரிகையில் சுப்ரமணிய சுவாமி முஸ்லிம்களின் வாக்குரிமையை பறிக்கவேண்டும் உள்பட கடுமையான வகுப்புவாத விஷக்கருத்துக்களை கக்கியிருந்தார். இதுத்தொடர்பாக தேசிய சிறுபான்மை கமிஷன் தலைவர் வஜஹத் ஹபீபுல்லாஹ் தலைமையில் கூடிய கமிஷனின் கூட்டத்தில் சுப்ரமணிய சுவாமி மீது சமூகங்களிடையே பகை உணர்வை வளர்த்த முயலும் குற்றத்திற்கான வழக்கை பதிவுச்செய்ய தீர்மானிக்கப்பட்டது.

டீஸ்டா ஸெடல்வாட்டிற்கு முன் ஜாமீன்

 
GERMANY-HUMAN-RIGHTS-PRIZEஅஹ்மதாபாத்:குஜராத் இனப்படுகொலை வழக்கில் பாதிக்கப்பட்டவர்களின் பெயரில் தவறான பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தார் என்ற வழக்கில் சமூக ஆர்வலர் டீஸ்டா ஸெடல்வாட்டிற்கு முன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

25 ஆயிரம் ரூபாய் நீதிமன்றத்தில் கட்டிவிட்டு அடுத்த மூன்று தினங்களுக்குள் பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவேண்டும் என நீதிபதி எஸ்.பி.கஜ்ரா உத்தரவிட்டார். அழைக்கும் வேளையில் விசாரணை அதிகாரியின் முன்னால் ஆஜராகவும் டீஸ்டாவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

எகிப்து:விசாரணை இன்று துவக்கம் – முபாரக் ஆஜராகமாட்டார் என ஊடகங்கள்

 
imagesCAWUDYS2கெய்ரோ:மக்கள் எழுச்சிப் போராட்டத்தை தொடர்ந்து பதவி விலகிய எகிப்தின் முன்னாள் சர்வாதிகாரி ஹுஸ்னி முபாரக் மீதான விசாரணை இன்று துவங்கவுள்ளது. இந்நிலையில் அவர் நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜராவது சந்தேகமே என பல்வேறு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

உடல்நிலை பாதிக்கப்பட்ட ஹுஸ்னி முபாரக் விசாரணை நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜராகமாட்டார் என அல் மிஸ்ர் அல் யவ்ம் பத்திரிகை கூறுகிறது. அதற்கு பதிலாக விசாரணை நடைபெறும், போலீஸ் அகடாமியுடன் இணைந்துள்ள ஹாலில் அவரை அனுமதிக்கப்படும் என கருதுவதாக அப்பத்திரிகை கூறுகிறது. போலீஸ் கஸ்டடியில் இருக்கும் வேளையில் முபாரக்கை இதயம் தொடர்பான நோயை  தொடர்ந்து கெய்ரோவில் ராணுவ மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அவர் சுயநினைவை இழந்துவிட்டதாக செய்திகள் வெளியாயின.

சிரியா மீதான தடையை ஐரோப்பிய யூனியன் தீவிரப்படுத்தியது

 
002-0731162132-European-Unionடமாஸ்கஸ்:மக்கள் எழுச்சி போராட்டங்களை அடக்கி ஒடுக்கும் பஸ்ஸாருல் ஆஸாத் அரசின் ராணுவ நடவடிக்கைகளை  தொடர்ந்து ஐரோப்பிய யூனியன் சிரியா அரசு மீதான தடையை தீவிரப்படுத்த தீர்மானித்துள்ளது.

அதிபர் பஸ்ஸாருல் ஆஸாத், பாதுகாப்பு அமைச்சர் அலி ஹபீப் ஆகியோர் மீது ஐரோப்பியன் யூனியன் ஏற்கனவே தடை ஏற்படுத்தியுள்ளது. இவர்களுடைய சொத்துக்களை கண்டுபிடிக்கவும், பயணங்களுக்கு தடை விதிக்கவும் ஐரோப்பியன் தீர்மானித்துள்ளது. சிரியாவுக்கு எதிரான தடையை உலக நாடுகள் வலுப்படுத்தவேண்டும் எனவும், இவ்விவகாரத்தில் ஐ.நா தலையிடவேண்டும் எனவும் ஹமாயில் சிரியா அரசின் ராணுவ நடவடிக்கைகளை தொடர்ந்து பிரிட்டனின் வெளியுறவுத்துறை செயலாளர் வில்லியம் ஹேக் நேற்று முன் தினம் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

மகாத்மா காந்தி கொலை:ஆர்.எஸ்.எஸ்ஸிற்கு வக்காலத்து வாங்கும் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி – காங்கிரஸ் கண்டனம்

 
93_ktthomasபுதுடெல்லி:இந்தியாவின் தேசத் தந்தையான மகாத்மா காந்தியை கொலைச்செய்த வழக்கில் ஆர்.எஸ்.எஸ் குற்றவாளி அல்ல என முன்னாள் உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கெ.டி.தாமஸ் வெளியிட்ட அறிக்கை பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

வரலாற்று உண்மைகளை மறைத்து கெ.டி.தாமஸ் வெளியிட்ட அறிக்கையை கேரள மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரமேஷ் சென்னித்தலா கண்டித்துள்ளார்.

விலைவாசி உயர்வு:வாக்கெடுப்பின் மூலம் விவாதம்

 
price riseபுதுடெல்லி:விலைவாசி உயர்வு தொடர்பாக மக்களவையில் வாக்கெடுப்புடன் கூடிய விவாதத்துக்கு மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது.

அனைத்துக் கட்சிகளும் ஒப்புக் கொள்ளக் கூடிய வகையில் விலைவாசி உயர்வு தொடர்பாக தீர்மானம் வடிவமைக்கப்படும் என நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பவன்குமார் பன்சால் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து தீர்மானத்தில் இடம்பெறும்.

Tuesday, August 2, 2011

கஸ்டடி மரணம்:மீண்டும் மோதல் சூழலை நோக்கி கஷ்மீர்

 
a7d741c0-a519-4fdb-b562-8db51ae750eeஸ்ரீநகர்:ஸோப்போரில் சிறப்பு நடவடிக்கை குழு(SOG) கஸ்டடியில் எடுத்து விசாரணை நடத்திய இளைஞர் மரணமடைந்ததை தொடர்ந்து ஒரு இடைவேளைக்கு பிறகு கஷ்மீர் பள்ளத்தாக்கில் மீண்டும் மோதல் சூழல் உருவாகியுள்ளது.

ஒருவழக்கு தொடர்பாக சிறப்பு நடவடிக்கை குழு போலீஸார் கடந்த சனிக்கிழமை ஸோப்போர் நகரத்தை சார்ந்த 28 வயதான நாஸிம் ராஷித் என்ற இளைஞரை விசாரணைக்கு அழைத்துச்சென்றனர். விசாரணையில் போலீஸின் அரக்கத்தனமான சித்திரவதையின் காரணமாக நாஸிம் இறந்துவிட்டார். இச்சம்பவத்தை கண்டித்து தெஹ்ரீக்-இ-ஹூர்ரியத் தலைவர் செய்யத் அலிஷா கிலானி நாளை கஷ்மீரில் முழு அடைப்பிற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

அஜ்மீர்:ஆர்.எஸ்.எஸ் தலைவர் இந்திரேஷ்குமார் விரைவில் கைதாவார்

 
14indresh2புதுடெல்லி:அஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கத்தின் மூத்த தலைவர் இந்திரேஷ்குமார் விரைவில் கைதுச்செய்யப்படுவார். இவ்வழக்கை விசாரித்துவரும் தேசிய புலனாய்வு ஏஜன்சி(என்.ஐ.ஏ) சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் குண்டுவெடிப்பில் இந்திரேஷ்குமாரின் பங்கினைக்குறித்து குறிப்பிட்டிருந்தது. இதனைக் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படவேண்டும் என என்.ஐ.ஏ நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

குண்டுவெடிப்பிற்கு முன்பு நடந்த சதித்திட்டத்திற்கு தலைமை வகித்தது, அஜ்மீர் உள்ளிட்ட பல்வேறு குண்டுவெடிப்புகளுக்கு நிதியுதவி அளித்தது ஆர்.எஸ்.எஸ்ஸின் தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் இந்திரேஷ்குமார்தான் என்பதற்கான ஆதாரங்கள் என்.ஐ.ஏவுக்கு கிடைத்திருப்பதன் அடிப்படையில் அவரை கைதுச்செய்வதற்கான முயற்சிகள் நடைபெற்றுவருகின்றன. குண்டுவெடிப்பு சதித்திட்டம் தீட்டப்பட்ட ரகசிய கூட்டத்தில் ஹிந்துத்துவா பெண் தீவிரவாதி பிரக்யாசிங் தாக்கூரும் பங்கேற்றுள்ளார்.

இரண்டு ஃபலஸ்தீனர்களை சுட்டுக்கொன்ற இஸ்ரேலிய ராணுவம்

 
israel_gaza_mourners_Militants-Killed-airstrikeராமல்லா:ஆக்கிரமிப்பு மேற்குகரையில் அகதி முகாமில் இரண்டு ஃபலஸ்தீனர்களை இஸ்ரேலிய ராணுவம் சுட்டுக்கொன்றுள்ளது. 23 வயது மற்றும் 25 வயதுடைய இளைஞர்களின் தலையிலும், அடிவயிறிலும் குண்டு பாய்ந்துள்ளதாக சுகாதார வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவம் குறித்து விசாரிப்பதாக இஸ்ரேலிய ராணுவ செய்தி தொடர்பாளர் பதிலளித்துள்ளார்.

Monday, August 1, 2011

முடிவுக்கு வந்தது நாடகம்: எடியூரப்பா ராஜினாமா

 
yedi2223பெங்களூர்:பல்வேறு நாடக காட்சிகள் அரங்கேறி இறுதியில் சட்டவிரோத சுரங்கத்தொழில் ஊழலில் சிக்கிய பா.ஜ.கவின் தென்னிந்திய ஹீரோ எடியூரப்பா தனது பதவியை ராஜினாமா செய்தார்.

கடந்த மூன்று தினங்களாக பா.ஜ.கவின் தலைமையை குழப்பத்தில் ஆழ்த்தி தீர்மானம் எடுக்காமல் காலம் கடத்திவந்த எடியூரப்பா நேற்று மாலை ஆளுநர் மாளிகைக்கு சென்று ஆளுநர் ஹெச்.ஆர்.பரத்வாஜிடம் ராஜினாமா கடிதத்தை அளித்தார். ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட ஆளுநர் புதிய முதல்வர் நியமனம்
ஆகும்வரை காபந்து முதல்வராக தொடர கேட்டுக்கொண்டார்.

Dua For Gaza