குண்டுவெடிப்பிற்கு முன்பு நடந்த சதித்திட்டத்திற்கு தலைமை வகித்தது, அஜ்மீர் உள்ளிட்ட பல்வேறு குண்டுவெடிப்புகளுக்கு நிதியுதவி அளித்தது ஆர்.எஸ்.எஸ்ஸின் தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் இந்திரேஷ்குமார்தான் என்பதற்கான ஆதாரங்கள் என்.ஐ.ஏவுக்கு கிடைத்திருப்பதன் அடிப்படையில் அவரை கைதுச்செய்வதற்கான முயற்சிகள் நடைபெற்றுவருகின்றன. குண்டுவெடிப்பு சதித்திட்டம் தீட்டப்பட்ட ரகசிய கூட்டத்தில் ஹிந்துத்துவா பெண் தீவிரவாதி பிரக்யாசிங் தாக்கூரும் பங்கேற்றுள்ளார்.
ஆர்.எஸ்.எஸ்ஸின் தலைவர்களில் ஒருவரான சுவாமி அஸிமானந்தா அஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கில் முதல் குற்றவாளியாவார். இவர் அளித்துள்ள குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தில், இந்திரேஷ்குமார்தான் குண்டுவெடிப்புகளுக்கு தேவையான நிதியுதவியை அளித்ததாக மற்றொரு ஆர்.எஸ்.எஸ் தலைவர் சுனில்ஜோஷி தன்னிடம் கூறியதாக தெரிவித்திருந்தார். இதனைத்தொடர்ந்து நடத்திய விசாரணையில் குண்டுவெடிப்புகளில் இந்திரேஷ்குமாரின் பங்கினைக்குறித்த ஆதாரங்கள் என்.ஐ.ஏவுக்கு கிடைத்தன.
பல்வேறு குண்டுவெடிப்புகளில் குற்றவாளியான சுனில்ஜோஷியை ரகசியம் கசிந்துவிடும் என்ற பயத்தில் ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதிகளே கொலைச்செய்தனர்.

0 கருத்துரைகள்:
Post a Comment