Tuesday, January 8, 2013

தமிழக அரசின் அறிவிப்பை பாப்புலர் ஃப்ரண்ட் வரவேற்கிறது.



தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 500 மதுபானக்கடைகள் அகற்றப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வரவேற்கின்றது

தமிழகம் முழுவதும் மது ஒழிப்பிற்கு எதிராக பிரச்சினைகளும் போராட்டங்களும் தீவிரம் அடைந்து வரும் நிலையில், தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 500 மதுபானக்கடைகள் அகற்றப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வரவேற்கின்றது . கடந்த ஒரு வருடத்தில் மட்டும் தேசிய நெடுஞ்சாலைகளில் 15,422 சாலை விபத்துகள் நடந்துள்ளது என்பதும் அதற்கு வாகனங்களை ஓட்டும் வாகன ஓட்டுனர்களின் குடிபோதையும் காரணம் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. தமிழக அரசின் இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம் விபத்துகள் குறைந்து, பொதுமக்கள் பாதுகாப்பாக பயணிக்க முடியும்.


இன்று நடக்கும் பாலியல் வன்முறைகளுக்கும், கொலை, கொள்ளை போன்ற கொடிய குற்றங்களுக்கும், போதை ஆசாமிகளின் செயல்பாடுகள் காரணம் என்பதையும் யாரும் மறுக்க முடியாது. ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டில் உள்ள மதுக்கடைகளை அகற்றுவதன் மூலம் பெரும்பாலான குற்றங்களை தடுக்க முடியும் என்பதால் தமிழக அரசு, தமிழகத்தில் உள்ள ஒட்டு மொத்த மதுக்கடைகளை மூடி குற்றங்களை தடுப்பதற்கும் பொதுமக்கள் பாதுகாப்புடனும் நிம்மதியுடனும் வாழ்வதற்கும் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறது.


இப்படிக்கு

J.முகம்மது ரசீன்

மாநில செயலாளர்,

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா,

தமிழ்நாடு

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza