Tuesday, January 8, 2013

மகாராஷ்டிராவில் முஸ்லிம்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு: 5 பேர் பலி: பலர் படுகாயம்!



மகாராஷ்டிர மாநிலம் மாலேகானிலிருந்து 45 கி.மீ. தூரத்தில் உள்ள "துலியா" நகரத்தில், நேற்று மாலை (06/01) முஸ்லிம்களை நோக்கி போலீஸ் கண்மூடித்தனமாக "துப்பாக்கிச்சூடு" நடத்தியதில் 5 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.நூற்றுகணக்கான முஸ்லிம்கள் "குண்டடி" பட்டு உயிருக்கு போராடி வருகின்றனர்.இறந்தவர்களில் இம்ரான் அலி கமர் அலி (20) ஹாஷிம் ஷேக் நசீர் (25) சவூத் அஹ்மத் (20) ஆகியோரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.முஹம்மத் இம்ரான், முஹம்மத் ஹசன்,  ஷாஹித் அப்துர்ரஷீத், ஃபஹீம், சலீம் அஹ்மத், ஜமீல் அஹ்மத், கலீல் அஹ்மத், முஹ்ஸின் முஷ்தாக், முஹம்மத்  தில்ஷாத், முஹம்மத் ஷஃபான், முஹம்மத் ஹாரூன், அய்யூப், முஹம்மத் ரிஸ்வான், அப்துல் பாஸித், முஹம்மத் தாவூத், சயீத் அஹ்மத், ஷம்சுல்லுஹா உள்ளிட்ட நூற்றுக்கும் அதிகமான முஸ்லிம்களின் உயிர்கள் ஊசலாடிக்கொண்டிருக்கிறது. 
போலீசின் துப்பாக்கிச்சூட்டுக்கு முன்பு "காவி பயங்கரவாதிகள்" முஸ்லிம் முஹல்லாக்களில் புகுந்து வீடுகளை சூறையாடினர்.

இக்ரா கம்ப்யூட்டர்ஸ் என்ற நிறுவனத்துக்குள் புகுந்து கொள்ளையடித்தனர்.
வீடுகளுக்கு தீவைத்தனர்.



தீயணைப்பு வண்டிகள் தீயை அணைக்க முயன்றபோதும், ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாக தடுத்து நிறுத்தினர்.கலவரத்துக்கு 3 காரணங்கள் கூறப்படுகின்றது:



1.மதியம் 2.30 மணியளவில் பாகிஸ்தானுக்கு எதிராக "இந்திய கிரிக்கெட் அணி" 167 ரன்னுக்கு "ஆல்-அவுட்" ஆனதைத்தொடர்ந்து, முஸ்லிம்களின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.(விடுமுறை நாளான நேற்று, உள்ளூர் இளைஞர்கள் "கிரிக்கெட் ஆட்டத்தில் மோதல்" என்றும் சொல்லப்படுகிறது)



2.முஸ்லிம் ஆட்டோ டிரைவரை தாக்கியது தொடர்பாக கேள்வி கேட்டபோது, கலவரக்கும்பல் முஸ்லிம்களை தாக்கியதாக கூறப்படுகிறது.



3.முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதியில் "சங்க பரிவாரங்கள்" வைத்திருந்த "மத-துவேஷ பேனரை கிழித்தது" தொடர்பில் கலவரம் நடத்தப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.



வேதனை என்னவென்றால், 2.45 முதல் தொடர்ச்சியாக 3மணி நேரம் நடத்தப்பட்ட கல்வீச்சில் காயங்கள் ஏற்பட்டதே தவிர உயிரழப்புக்கள் இல்லை.கலவரத்தை கட்டுப்படுத்துகிறோம் பேர்வழிகள் என்று சொல்லிக்கொண்டு களத்தில் இறங்கிய காவி சிந்தனை கொண்ட போலீஸ், முஸ்லிம்களை குறிவைத்து சுட்டுக்கொன்றது.இதனால், துலியா நகரத்தின் மச்லி பஜார், வலிபுரா, தாஷாபுரா, மவ்லவி கஞ்ச் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள முஸ்லிம்கள், உறைந்துபோய் வீடுகளில் முடங்கிப்போய் உள்ளனர்.வழக்கம் போல் போலீஸ், முஸ்லிம் வீடுகளின் கதவுகளை உடைத்து "நல்லிரவுக்கைது" கச்சேரிகளையும் அரங்கேற்றியது

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza