ஷஹீத் யஹ்யா அய்யாஷ் |
மனித வரலாற்றில் அநேகமான நபிமார்களைத் தந்த பெருமை பலஸ்தீனுக்கே உரித்தானது. இஸ்லாத்தின் முதலாவது கிப்லாவும், மூன்றாவது புனிதஸ்தலமான அல் அக்ஸாவும் அங்கேதான் அமைந்துள்ளது. நபிமார்களான மூஸா, ஈஸா அலைஹிஸ்ஸலாம் ஆகியோரின் பிரச்சாரத் தளமாக பலஸ்தீன் விளங்கியுள்ளதால் அது யூத கிறிஸ்தவர்களுக்கும் புனிதமானதே! இயற்கை வளங்களும், பசுமைச் செழிப்பும் மிக்க பலஸ்தீன் பலமுறை முஸ்லிம்களின் கையிலிருந்து பறிபோய் மீண்டும் கைப்பற்றப்பட்டுள்ளது. இறுதியாக பிரித்தானிய காலணித்துவவாதிகள் உஸ்மானிய கிலாபத்திற்குக் கீழிருந்த பலஸ்தீனைக் கைப்பற்றி அதனை யூதர்கள் ஆக்கிரமித்துக்கொள்ள வழி அமைத்துக் கொடுத்தார்கள்.
அங்கே இஸ்ரேல் என்னும் முன் பின் தெரியாத ஒரு நாடு ஈன்றெடுக்கப்பட்டது.1948ல் இஸ்ரேல் உருவானது முதல் பலஸ்தீனில் முஸ்லிம் சிறுவர்கள் முதியோர்கள் , தாய்மார்கள் , இளைஞர்கள் இரத்தம் ஈவிரக்கமின்றி இன்று வரை கொல்ல பட்டுவருகின்றனர் . இஸ்ரேலின் முன்னாள் பிரதமர்களான பென் குரியோன்,மெனாசெம் பெகின்,இஸ்ஹாக் ரபின்,ஷிமோன் பெரஸ், ஏரியல் ஷெரோன் போன்றவர்கள் கூட ராணுவத்திலும், பயங்கரவாதக் குழுக்களிலும் இருந்த போது முஸ்லிம்களது இரத்தக் கறைகளை தங்களது கைகளில் பூசிக் கொண்டவர்கள்தாம்.
ஷஹீத் யஹ்யா அய்யாஷ் |
இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கு எதிராக பலஸ்தீனில் உதயமான மாவீரர்களுள் யஹ்யா அய்யாஸ் இரு காரணங்களுக்காக பிரதான இடத்தை வகிக்கின்றார். ஒன்று அவர் இஸ்லாமிய வழிமுறைகளைப் பின்பற்றிப் போராடியது. அடுத்தது, தற்கொலைத் தாக்குதல், குண்டு பொருத்தப்பட்ட வாகனங்களை வெடிக்கவைத்தல் போன்ற யுத்த முறைகளை (MODUS OPERANDI) முதன் முதலில் அறிமுகப்படுத்தியமை. இங்கே தற்கொலைத் தாக்குதல் இஸ்லாத்தில் கூடுமா? என்ற சர்ச்சை எழுகின்றது. அல்லாமா யூஸுப் அல் கர்ழாவி போன்ற உலகின் தலை சிறந்த உலமாக்கள், பலஸ்தீன் ஜிஹாதில் தற்கொலைத் தாக்குதல் கூடுமென ஃபத்வா வழங்கியுள்ளனர்.
ஒரு சாதாரண விவசாயிக்கு மகனாகப் பிறந்த அய்யாஷ் அபார திறமைசாலியாக காணப்பட்டார். ரசாயனப் பொறியியல் துறையில் பயின்று இஸ்ரேலிய ராணுவத்தினரையே ஆச்சரியப்படுத்தும் அளவுக்கு குண்டு தயாரிப்பதிலும், திட்டமிடுவதிலும் நிபுணத்துவம் பெற்றிருந்தார். முப்பது வயதையும் எட்டாத இந்த இளைஞன் யூதர்களின் உள்ளங்கள் வெடிக்குமளவு அவற்றுள் பீதியையும், அச்சத்தையும் உண்டுபண்ணினார். அதுவரை காலமும் சுற்றுப்புறத்தில் இருந்த வந்த யூதப் எதிர்ப்புப் போராட்டத்தை இஸ்ரேலின் இதயத்திற்கே எடுத்துச் சென்ற பெருமையும் அவரையே சாரும். ஹமாஸ் இயக்கம் அய்யாஷைப் பற்றிக் குறிப்பிடும் போது “ அவர் ஒரு மறைவான ராணுவ மனிதன்” என வர்ணித்தது.
அப்படிப்பட்ட அந்த போராளி யஹ்யா அய்யாஷ் யஹ்யா அய்யாஷ் 1966 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 6 ஆம் தேதி பலஸ் தீனின் மேற்குக் கரையில் பிறந்தார். அவரது ஏழாம் வயதிலே அல்குர்ஆன் முழுவதையும் மனனமிட்டார். உயர்தரத்தில் சிறந்த முறையில் சித்தியடைந்துபல்கலைக்கழகத்திற்கும் தேர்வு செய்யப்பட்டார்.1988 ஆம் ஆண்டு பொறியியல் பீடத்தின் மின் பொறியியல் துறையில் பட்டம்பெற்று வெளியேறினார். என்றாலும் அவருக்கு இரசாயண துறையிலே ஆர்வம் காணப்பட்டது. உயர்கல்விக்காக ஜேர்மன் செல்வதற்கு முயற்சித்த போதும் அவருக்கு அனுமதி வழங்கப்படவில்லை.யஹ்யா அய்யாஷ் தனது சிறியதாயின் மகளை திருமணம் முடித்தார். அல்லாஹ் அவர்களுக்கு பர்ராஃ, யஹ்யா, அப்துல் லதீப் ஆகிய மூன்று குழந்தைகளை அருளினான்.1987 ஆம் ஆண்டிலே பலஸ்தீன் விடுதலைக்காகப் போராடும் ஹமாஸ் இயக்கத்துடன் இணைந்துகொண்டார். அதன் இராணுவப் பிரிவான இஸ்ஸுத் தீன் கஸ்ஸாம் பிரிவின் ஆரம்ப அங்கத்தவராகவும் அய்யாஷ் காணப்பட்டார்.கதாஇப் (கதாஇப் இஸ்ஸுத்தீன் அல் கஸ்ஸாம் - அதாவது இஸ்ஸுத்தீன் அல் கஸ்ஸாம் படைப்பிரிவு. ஹமாஸ் இயக்கத்தின் இராணுவப் பிரிவு இதுதான்) இதில் அவர் ராணுவ தலைவராக இருந்தார்
இஸ்ரேலிய இயல்பு வாழ்வில் ஒரு செயற்கைப் பூகம்பத்தை ஏற்படுத்திய, பலஸ்தீன போராட்ட வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைக் காட்டித்தந்த,
பலஸ்தீனின் வரலாறு நெடுகிலும் அந்நாள் பேசப்பட்டுக் கொண்டு இருந்த மேலும் இஸ்ரேலிய யூதர்களை கதிகலங்க வைத்த பல தாக்குதல்களை இவர் அறிமுகப்படுத்தி வைத்தார் இதனால் இவரைக் கொல்வதற்காக இஸ்ரேலியர்கள் பல தடவைகள் முயற்சித்தனர். தமக்கு மத்தியில் மாறுவேடத்தில் வாழ்ந்துவந்த அவரைத் தேடிப் பிடிக்க இஸ்ரேலுக்கு நான்கு வருடங்கள் பிடித்தன. இதற்காக அது பெருந்தொகைப் பணத்தையும் செலவிட நேர்ந்தது.
1996 ஆம் ஆண்டு ஜனவரி 5 ஆம் தேதி வெள்ளிக் கிழமை1 காலையில் தனது தந்தையுடன் தொலைபேசிமூலம் உரையாடிக் கொண்டிருந்த அவருக்கு தெரியாமல் யூத தீவிரவாதிகளால் அவருடைய உறவினர் (துரோகி )யின் மூலம்நயவஞ்சகமாக தொலைபேசியில் வெடிகுண்டு வைத்து தொலைபேசி வெடித்துச் சிதறி அவர் ஷஹீதானார்.இந்த நாளில் இவரை நினைவு கூறுவோம் அந்த தியாகியை பலஸ்தீன் மக்கள் ஒருபோதும் மறந்து விடமாட்டார்கள். பாலஸ்தின விடுதலைக்காக போராடிய மாவீரன்
இஸ்ரேலிய சியோனிச படைகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த பலஸ்தின சிங்கம் யஹ்யா அய்யாஷ் வீழ்த்தப்படவில்லை விதைக்கபட்டுள்ளார்
அய்யாஸ் மறைந்து வாழ்ந்த ஒரு மனிதன் என்பதனால் அவரது தியாக வாழ்வும், பணிகளும் பற்றிய தகவல்கள் மிகவும் குறைவாகவே வெளிவந்துள்ளன.மேலும் யஹ்யா அய்யாஸ் என்ற மாவீரனின் போராட்ட வரலாறை உள்ளடக்கிய ”பூகம்பம்” என்ற 178 பக்கங்கள் கொண்ட நூல் இவருடைய போராட்ட வரலாறை விவரிக்கிறது.
source: popularfrontnellai.com
0 கருத்துரைகள்:
Post a Comment