Sunday, January 6, 2013

தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட "முஹம்மத் ஹுசைன்" நிரபராதி என விடுதலை!


டெல்லியின் "பஞ்சாபி பாக்" பகுதியில் "ப்ளூ லைன்" பேருந்து குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு "தூக்கு தண்டனை" விதிக்கப்பட்டு 15 ஆண்டு காலமாக சிறையில் இருந்த "முஹம்மத் ஹுசைன்" நிரபராதி என அடிஷனல் செஷன்ஸ் நீதிபதி பவன்குமார் ஜெயின் தீர்ப்பளித்தார்.
பாகிஸ்தானை சேர்ந்த ஜூல்பிகார் அலி என்ற முஹம்மத் ஹுசைன் மீதான வழக்கில், 2004 அக்டோபர் 26ல் தூக்கு தண்டனை விதித்து கீழ்கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
2006 ஆகஸ்ட் 4ல் டெல்லி உயர்நீதிமன்றமும் தூக்கு தண்டனையை உறுதி செய்தது.

2011 ஆகஸ்ட் 31ல் உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் படி "மறுவிசாரணை" நடத்தப்பட்டதில் "முஹம்மத் ஹுசைன்" மீதான எந்த குற்றமும் நிரூபிக்கப்படவில்லை, என அறிவித்த நீதிபதி ஜெயின், அவருக்கு இலவச சட்ட உதவி வழங்கிய "ராஜேஷ் ஆனந்"தை வெகுவாக பாராட்டினார்.
ஹுசைன் மீது வேறு வழக்குகள் இல்லையென்றால், அவர் உடனடியாக பாகிஸ்தானுக்கு அனுப்பிவைக்கப்பட வேண்டும், என உத்தவிட்டார்.
6 மாதகால இடைவெளியில், மேல்கோர்ட்டுகள் மூலம் சம்மன் அளிக்கப்பட்டால், விசாரணைக்கு ஆஜராவேன் என உத்தரவாதம் அளிக்கும் வகையில், ரூ.10,000 க்கான உறுதி பத்திரம் எழுதிக்கொடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார், நீதியரசர் பவன்குமார் ஜெயின்.
 source: maruppu.in
1997 செப்டெம்பர் 30ந்தேதி நடந்த இந்த குண்டுவெடிப்பில், 4 நபர்கள் பலியாயினர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza