விஸ்வரூபம் படத்துக்கு தமிழக அரசு பிறப்பித்துள்ள தடை உத்தரவை நீக்கி உத்தரவிடக் கோரி படத்தின் இயக்குநரும், ஹீரோவுமான கமல்ஹாசன் போட்டுள்ள வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ஜனவரி 28ம் தேதி வரை தடை நீடிக்கும் என இடைக்கால உத்தரவிட்டுள்ளது.
இதனால் திட்டமிட்டபடி விஸ்வரூபம் இன்று தமிழகத்தில் திரையிடப்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. விஸ்வரூபம் படத்திற்கு இஸ்லாமியர்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளும் போர்க்கொடி உயர்த்தியுள்ளன. படத்தை வெளியிட அனுமதிக்க மாட்டோம் என்றும் அவை அறிவித்துள்ளன. இதையடுத்து தமிழக அரசு 2 வார காலத்திற்கு இப்படத்தை திரையிடுவதற்குத் தடை விதித்துள்ளது. இதை எதிர்த்து தற்போது நடிகர் கமல்ஹாசன் நீதிமன்றத்திற்கு சென்றார்
விஸ்வரூபம் படத்தை நீதிமன்றம் இடைக்கால தடையை பற்றி வழக்கறிஞர் ராஜா முகம்மத் பத்திரிக்கைக்களுக்கு பேட்டி கொடுத்த பொழுது பத்திரிக்கைக்களுக்கு பேட்டி கொடுத்த பொழுது
இதுதொடர்பாக இன்று அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், மத்திய தணிக்கைக் குழு அனுமதி தந்த பிறகும் தடை விதிப்பது சட்ட விரோதம் என கூறியுள்ளார். மேலும் இதை அவசர வழக்காக கருதி உடனடியாக விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து இந்த வழக்கு இன்று பிற்பகல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. நீதிபதி வெங்கட்ராமன் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது கமல்ஹாசனின் வக்கீல்களுக்கும், அரசு வக்கீலுக்கும் இடையே காரசாரமான வாதம் நடந்தது.
இது தொடர்பாக விஸ்வரூபம் பட தயாரிப்பாளர்களான கமல்ஹாசன், சந்திரஹாசன் ஆகியோர் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜரானார்.
மேலும் தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் சங்கரசுப்பு மற்றும் ராஜா முஹம்மத் வாதிடுகையில், விஸ்வரூபம் படத்தை வெளியிட்டால், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்றார். இந்நிலையில் இருதரப்பு வாதத்தைத் தொடர்ந்து, மாலையில் தீர்ப்பளித்த நீதிபதி, 'விஸ்வரூபம்' படத்தை தாம் 26-ம்தேதி பார்ப்பதாகவும், அதற்குப் பிறகு படத்தை திரையிட விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவதா, வேண்டாமா என்ற முடிவுக்கு வரலாம் என்றும் கூறினார். மேலும் ஜனவரி 28ம் தேதி வரை படத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தடை தொடரும் என்றும் அறிவித்தார்.
கத்தார், குவைத், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட வளைகுடா நாடுகள், சிங்கப்பூரைத் தொடர்ந்து மலேசியாவிலும் இன்று காலை இப்படம் தடை செய்யப்பட்டது.விஸ்வரூபம் படத்திற்கு எதிராக இந்தியா முழுவதும், மேலும் போன்ற உலகின் பல நாடுகளிலும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. படத்திற்கு எதிராக முஸ்லிம்கள் அணிதிரண்டு வருகிறார்கள்.
மேலும் இந்தியாவில் கேரளா,ஆந்திரா ,கர்நாடகா போன்ற நாடுகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது
மேலும் இந்தியாவில் கேரளா,ஆந்திரா ,கர்நாடகா போன்ற நாடுகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது
0 கருத்துரைகள்:
Post a Comment