ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பாண்டில் பல்வேறு இடங்களில் 50 பேர் கொலை செய்யப்பட்டனர். 254 விபத்துகளில், 272 பேர் பலியாகியுள்ளனர். இதில் 841 பேர், சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.
"கொலவெறி': நடப்பாண்டு பல காரணங்களுக்காக, 50 பேர் கொல்லப்பட்டனர். வீடு, கடைகளில் திருட்டு, வழிப்பறி, என, 296 வழக்குகளில் இதுவரை 210 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 254 விபத்துகளில், 272 பேர் பலியாகினர். 521 பேர் காயமடைந்தனர். சிறு காயங்களுடன் 841 பேர் உயிர் தப்பினர்.
இதுகுறித்து மயில்வாகனன் எஸ்.பி., கூறியதாவது: நிலுவை வழக்குகள் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஜாதி மோதல் உருவாகாமல் தடுக்க, கிராமம்தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இதற்காக ஒவ்வொரு கிராமத்திலும் முக்கிய பிரமுகர்கள் தலைமையில், குழு அமைக்கப்படும். இவர்கள் அப்பகுதி மக்களின் அமைதிக்கு உதவுவர்.
டூவீலர் ஓட்டிகள் கண்டிப்பாக "ஹெல்மெட்' அணிய வேண்டும். குடிபோதையில் வாகனங்கள் ஓட்டுவதால் விபத்தும், பலியும் அதிகரிக்கிறது. மது போதையில், வாகனங்கள் ஓட்டுவோர் மீது நடவடிக்கை தொடரும், என்றார்.
0 கருத்துரைகள்:
Post a Comment