Wednesday, October 3, 2012

பூரண மதுவிலக்கை அமுல்படுத்த கோரி தமிழகம் முழுவதும் SDPI கட்சி நடத்திய மனித சங்கிலி போராட்டம்!

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி காந்தி பிறந்த தினமான அக்டோபர் -02 ஆம் தேதி எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பாக தமிழகம் முழுவதும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.தொடர்ச்சியாக 15 நாட்கள் தமிழக மக்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரப்பாடல்கள்,நாடகங்க
ள், துண்டு பிரசுரம் விநியோகம
்,போஸ்டர் பிரச்சாரம், தெருமுனை கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள் என்று மக்களுக்கு மதுவின் கொடுமையினை விளக்க எஸ்.டி.பி.ஐ கட்சி முடிவு செய்துள்ளது.




சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் கட்சியின் மாநிலத் தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி செய்தியாளர்களிடம் அளித்த பேட்டி: 
அக்டோபர் 2 க்கு முன்பு மது விலக்குக்கான அறிவிப்பை அரசு வெளியிட வேண்டும் என எஸ்.டி.பி.ஐ கட்சியும் பல்வேறு அரசியல் கட்சிகளும் அரசை கேட்டிருந்தன. அரசு இதுவரை வெளியிடாதது வருந்ததக்கது. 
இலவசப்பொருட்களை மக்கள் கேட்கவில்லை. மதுக்கடைகள் வேண்டாம் என்றுதான் மக்கள் கேட்கிறார்கள். போராடுகிறார்கள். மக்கள் கேட்காத இலவச பொருட்களை வழங்குவதற்காக பல்லாயிரம் பெண்களின் வாழ்க்கையை பறிப்பது எப்படி நியாயம்?




எனவே பூரண மதுவிலக்கை அமுல்படுத்தக் கோரியும் - டாஸ்மாக் கடைகளை அரசு கைவிட வலியுறுத்தியும் இந்த மனித சங்கிலி போராட்டத்தினை எஸ்.டி.பி.ஐ. கட்சி இன்று தமிழகம் முழுவதும் நடத்திக்கொண்டிருக்கிறது. 
லட்சக்கணக்கான குடும்பங்களின் கண்ணீர் துடைத்திட அரசு உடனே மதுக்கடைகளை இழுத்து மூட வேண்டும். தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமுல்படுத்த வேண்டும். இதை வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ சார்பில் வரும் 15 நாட்கள் தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு பிரச்சாரங்களை நடத்த உள்ளோம். மேலும் அக்டோபர் 17ம் தேதி தலைமை செயலகமும், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களும் முற்றுகையிடப்படும். என்று தெரிவித்தார். 



இதில் மாநில பொதுச்செயலாளர் நெல்லை முபாரக் , பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ஜி.கே.மணி,விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரின் தனிச்செயலாளர் சேகுவேராஆகியோர் பங்கேற்றனர்.


தமிழகம் முழுவதும் நடைபெற்ற இப்போராட்டத்தில் சுமார் 10,000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்..
 




0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza