Thursday, October 18, 2012

ராமநாதபுரத்தில் SDPI நடத்திய முற்றுகை போராட்டம்! 500பேர் கைது:

மது விலக்கை அமுல்படுத்து! டாஸ்மாக்கை இழுத்து மூடு! என்ற கோஷத்துடன் SDPI கடந்த 15 தினங்களாக தமிழகம் முழுவதும் மதுவுக்கு எதிராக தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வந்தது.

 இந்த பிரச்சாரத்தின் இறுதி நாளான நேற்று சென்னையில் தலைமைச் செயலகமும், மற்ற மாவட்டங்களில் ஆட்சியர் அலுவலகங்களும் முற்றுகை இடப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.


 அதன்படி ராமநாதபுரத்தில் எஸ்.டி.பி.ஐ., மாவட்ட தலைவர் நூர்ஜியாவுதீன் தலைமையில் மாவட்ட துணை தலைவர் அம்ஜத் ஹூசைன், மாவட்ட பொது செயலாளர் இஷாக், மாவட்ட செயலாளர் சரீப் சேட் உள்ளிட்டோர் ராமநாதபுரம் பஸ் டெப்போ அருகில் மதுவிலக்கை அமல்படுத்தகோரி கோஷங்கள் எழுப்பி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட ஊர்வலமாக செல்ல முயன்றனர்.
 இவர்களில் 110 பெண்கள் உட்பட 500 பேரை, ராமநாதபுரம் டி.எஸ்.பி., முரளிதரன் தலைமையில் போலீசார், கைது செய்து மாலையில் விடுவித்தனர். 

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza