Thursday, October 18, 2012

அணு உலை கழிவுகளை அரசு என்ன செய்யும்? உச்ச நீதிமன்றம் கேள்வி


புதுடெல்லி : கூடங்குளத்தில் அணுஉலை கழிவுகளை அகற்ற என்ன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்த்து தொடரப்பட்ட பொது நலவழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், தீபக் மிஸ்ரா ஆகியோர் கொண்ட பெஞ்ச் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அணுஉலையில் இருந்து வெளியேறும் கழிவுகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்று வாதிடப்பட்டது.

அப்போது நீதிபதிகள், ‘‘அணு உலை கழிவுகள் எங்கு போகும்? கழிவுகளை அகற்ற என்ன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது? அணு உலை கழிவை வேறு இடத்துக்கு மாற்றினால், சுற்றுச்சூழலிலும் மக்களின் உடல் நலத்திலும் அது என்ன பாதிப்புகளை ஏற்படுத்தும்? எந்த அளவு கழிவுகளை எவ்வளவு காலத்துக்கு பாதுகாப்பாக வைப்பீர்கள்?’’ என்று சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

அணுசக்தி கழகத்தின் சார்பில் ஆஜரான மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் ரோஹின்டன் நாரிமன், ‘‘அணுஉலை கழிவு தொடர்பான எல்லா கேள்விகளுக்கும் பதில் அளிக்கும் வகையில் மனு தாக்கல் செய்யப்படும்’’ என்று தெரிவித்தார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza