தமிழகம் முழுவதும் சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா(SDPI) சார்பில் மதுவுக்கு எதிராக தீவிர பிரச்சாரம் கடந்த அக்டோபர்-2 முதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியில், எஸ்.டி.பி.ஐ., சார்பில் மதுஒழிப்பு ஆர்ப்பாட்டம், நகர் தலைவர் அன்வர் அலி தலைமையில் நடந்தது.
அப்துல் காதர் வரவேற்றார்.தீபம் மகளிர் அணி ஒருங்கிணைப்பாளர் புஸ்பராணி, மாவட்ட அமைப்பாளர் கார்மேகம், ராமநாதபுரம் சட்டசபை தொகுதி தலைவர் பைரோஸ்கான், மாவட்ட தலைவர் நூர் ஜியாவுதீன் உட்பட பலர் பங்கேற்றனர். அன்னை தெரசா மகளிர் மன்றத்தை சேர்ந்த ராதா நன்றி கூறினார்.


0 கருத்துரைகள்:
Post a Comment