காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடந்த 3 ஆண்டுகள் வெளிநாட்டு பயணங்கள் மேற்கொண்ட வகையில், மக்கள் வரிப்பணம் 1,880 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டு இருப்பதாக குஜராத் முதல்-மந்திரி நரேந்திர மோடி குற்றம் சாட்டினார். ஒரு பத்திரிகையில் வெளியான தகவலை அடிப்படையாக கொண்டு இந்த குற்றச்சாட்டை தெரிவித்தார்.
இதை, காங்கிரஸ் கட்சி மறுத்த போதிலும், உண்மையான செலவு எவ்வளவு? யார் பணம்? என்பதை இதுவரை தெரிவிக்கவில்லை. இந்நிலையில், நரேந்திர மோடி மீதே இது போன்றதொரு குற்றச்சாட்டை சமூக சேவகி ஒருவர் இப்போது கூறியுள்ளார்.
நரேந்திர மோடியின் பயண செலவு விவரங்களை தர குஜராத் அரசாங்கம் மறுக்கிறது என்று அவர் கூறியுள்ளார். இதுபற்றி, வதோதராவை சேர்ந்த சமூக சேவகி திருப்டிஷா என்பவர் கூறியதாவது:-
குஜராத்தில் கடந்த 2007-ம் ஆண்டில் மார்ச் 10-ந்தேதி முதல் செப்டம்பர் 20-ந்தேதிவரை, பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் தொடர்பான சம்மேளனங்கள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சிக்கு குஜராத் அரசு ஏற்பாடு செய்திருந்தது. இதில் முதல்-மந்திரி நரேந்திரமோடியும் மந்திரிகள் சிலரும் கலந்து கொண்டனர். இவர்களின் பயணத்துக்கு பெரும்பாலும் ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டன.
ஒரு மாதத்தில் 27 இடங்களில் நடை பெற்ற இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளச் சென்ற முதல்- மந்திரி மற்றும் மந்திரிகளுக்கு ஆன செலவு எவ்வளவு? என்று கேட்டு தகவல் அறியும் உரிமை சட்டத்தில் குஜராத் அரசுக்கு மனு அனுப்பினேன். பதில் கிடைக்காததால் பலமுறை மனுக்கள் அனுப்பினேன். இறுதியாக மோடியின் பயண செலவு விவரங்கள் எங்களிடம் இல்லை என்று அரசின் பொது நிர்வாக துறை பதில் அளித்தது.
ஐந்து ஆண்டுகளாக போராடியும் இந்த விவரத்தை என்னால் பெற முடியவில்லை. பொது நிர்வாக துறையின் பதில் முட்டாள் தனமானதாகவும், நம்ப முடியாததாகவும் உள்ளது. இதையடுத்து தகவல் தலைமை ஆணையரிடம் புகார் செய்தேன். இந்த புகார் மனு மீது 2012, செப்டம்பர் 26-ந்தேதி விசாரணை நடந்தது. அப்போது அடுத்த கட்ட விசாரணைக்கு (அக்டோபர்) முன்பாக, எனக்கு தகவல் தர வேண்டும் என்று, குஜராத் அரசின் பொது நிர்வாக துறைக்கு, தலைமை தகவல் ஆணையம் உத்தரவிட்டது. அவர்களின் தகவலுக்காக காத்திருக்கிறேன்.
மற்றொரு தகவல் அறியும் உரிமை வாதியான பாரத் சிங் ஜாலா கூறுகையில் மோடி சீனா, ஜப்பான் நாடுகளுக்கு மேற் கொண்ட பயணங்களுக்கு ஆன செலவு மற்றும் அவர் மேற் கொண்டுள்ள விவேகானந்த யாத்திரைக்கான செலவு விவரங்களை மாநில அரசு வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். அப்படி தெரிவிக்க மறுத்தால், அது கோல்மால் வேலையாகத் தான் கருதப்படும் என்றார்.

0 கருத்துரைகள்:
Post a Comment