ராமநாதபுரம், : அழுகிய நிலையில் வீட்டுக்குள் கிடந்த பெண் உடலை மீட்டு போலீசார் விசாரிக்கின்றனர்.
ராமநாதபுரம் அருகே அழகன்குளத்தைச் சேர்ந்தவர் சகுபர். இவரது மனைவி தவ்லத் ஜஹான் (42) கணவரிடமிருந்து விவகாரத்து பெற்ற இவர் ஒரு வீட்டில் தனியாக வசித்தார்.
இவரது மகன், மகள் வெளிநாட்டில் வசிக்கின்றனர். தவ்லத்ஜஹான் தனியாக வசித்து வந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வந்தது. இதுகுறித்து அக்கம், பக்கத்தினர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
அங்கு சென்ற தேவிபட்டினம் போலீசார் வீட்டு கதவை திறந்து பார்த்தனர். அங்கு தவ்லத்ஜஹான் உடல் அழுகிய நிலையில் தூக்கில் தொங்கிக் கிடந்தது தெரிந்தது. உடலை கைப்பற்றி சம்பவ இடத்திலேயே பிரேதப்பரிசோதனை செய்து, உறவினர்களிடம் ஒப்படைத்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தவ்லத் ஜஹான் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலையா என விசாரிக்கின்றனர்.

0 கருத்துரைகள்:
Post a Comment