பெற்றெடுத்த குழந்தையை விற்று அந்தப் பணத்தில் கைபேசியும், ஆயத்த ஆடையும் வாங்கிய இளம் தாயை காவல் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
ஒடிசா மாநிலத்தில் இந்த அவலம் நிகழ்ந்துள்ளது. அற்ப காரணங்கள், சொற்ப பணத்திற்காக பெற்ற குழந்தையை விற்கும் அவலம் அதிகரித்து வருகிறது.
ஒடிசாவின் ஜாஜ்பூர் மாவட்டம் முந்தமாலா கிராமத்தில் ராக்கி பத்ரா என்ற பெண் தனது 17 மாத ஆண் குழந்தையை ரூ.ஐந்தாயிரத்துக்கு விற்று, கிடைத்த பணத்தில், ஜீன்ஸ் ஆயத்த ஆடையும், கைபேசியும், கைபேசிக்குரிய சேமிப்புச் சில்லுகள் (மெமெரி கார்டு) வாங்கியுள்ளார்.

இது பற்றிய தகவல் அறிந்த காவல்துறை அப்பபெண்ணை கைதுசெய்து அவரிடமிருந்து கைபேசியை பறிமுதல் செய்தனர். பின்னர் விற்பனை செய்யப்பட்ட குழந்தையையும் மீட்டனர்.
நீதிமன்றத்தி்ல் விசாரணையின் போது சிறையில் வாடும் தனது கணவனை மீட்பதற்காக சட்டச் செலவினங்களுக்காக குழந்தையை விற்றதாக அந்தப் பெண் கூறிட, அதை ஏற்க மறுத்த நீதிபதி தாய் குழந்தையுடன் இணைந்திருக்க வேண்டுமென உத்தரவிட்டார்.
அதன் பின்னரும் அந்தத் தாய் தன்னுடன் குழந்தையை அழைத்து செல்ல மறுப்பு தெரிவித்ததால் குழந்தை காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுளதாக காவல் துறை தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

0 கருத்துரைகள்:
Post a Comment