Monday, October 8, 2012

அதிகரிக்கும் அமெரிக்க ராணுவத்தினர் தற்கொலை!

Suicides at 10-year high in US military
வாஷிங்டன்:அமெரிக்க ராணுவத்தினரின் தற்கொலை கடந்த ஆண்டுகளை விட இப்போது அதிகரிக்கத் துவங்கிவிட்டது. அமெரிக்க ராணுவத்தினரின் தற்கொலைகளில் 10-ல் 6 பேர்  தங்களின் தற்காப்பிற்காக வைத்துள்ள துப்பாக்கியால் சுட்டே இறந்துள்ளனர்.  இதை  கட்டுப்படுத்த அமெரிக்க அரசு புதிய கட்டுப்பாடுகளை கொண்டுவர முயற்சி  மேற்கொண்டுள்ளது.
இந்த வருடம் இதுபோன்று தற்கொலைகள் அதிகரித்துள்ள நிலையில்,  அவர்கள் வைத்துள்ள துப்பாக்கிகள் மற்ற போதைப் பொருட்களை பாதுகாக்கவோ அல்லது மறைத்து  வைக்கவோ குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் மற்றும் சேவை உறுப்பினர்களிடையே  விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய ராணுவ துறையினர் முயற்சி எடுத்து  வருகின்றனர்.

இவ்வாறு தற்கொலைகள் அதிகரித்துவரும் நிலையில், இதை ஒரு தேசிய  பேரழிவாக கருதி தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் இப்பிரச்சினையை தீர்க்க  முன்வரவேண்டும் என்று அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
ஆயுதங்கள்  வைத்திருப்பதற்கான கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டுமென நாட்டில் பல்வேறு  கண்டனக் குரல் எழுப்பப்பட்டு வருகின்றன. இருப்பினும் இப்பிரச்சினையில், அமெரிக்க  ராணுவத் தலைமையகமான பெண்டகனுக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza