நியூசிலாந்து தலைநகர் வெலிங்டனில் உலக பாதுகாப்பு மாநாடு நடந்தது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நிபுணர்கள் கலந்து கொண்டு சாலை பாதுகாப்பு குறித்து பல்வேறு கருத்துக்கள் தெரிவித்தனர்.
இந்த மாநாட்டில் ஜெனிவா நாட்டு விஞ்ஞானி மஞ்சுல் இந்திய சாலை விபத்துக்கள் குறித்து கூறியதாவது:
இந்தியாவில் சாலை பாதுகாப்பு பெரும் கவலையளிப்பதாக உள்ளது. உலகம் முழுவதிலும் ஏற்படும் 10 சாலை விபத்துக்களில் ஒன்று இந்தியாவில் நடைபெறுகிறது. ஒவ்வொரு ஒரு மணி நேரத்திற்கும் இந்தியாவில் சுமார் 14 பேர் சாலை விபத்துக்களில் உயிர் இறக்கிறார்கள்.
இந்தியாவின் வாகன பங்களிப்பு வெறும் 1 சதவிதமே என்றாலும், அதிகரிக்கும் வாகனங்கள், சாலை விரிவாக்க எண்ணிக்கை மற்றும் பாதுகாப்பு மேம்பாட்டில் கவனம் செலுத்தாததே பெரிய அளவில் சாலை விபத்துகள் ஏற்படுவதற்கு காரணமாகிறது.
ஐ.நா.சபையில் ‘பத்தாண்டு கால நடவடிக்கை’ என்ற திட்டத்தில் 50 சதவீத சாலை மரணங்களை குறைக்கும் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்ட போதிலும், அதுகுறித்து இதுவரை எந்த திட்டங்களையும் அறிவிக்கவில்லை.
இந்தியாவில் 2010ம் ஆண்டு சாலை இறப்புகளின் எண்ணிக்கை 1.32 லட்சம் ஆக இருந்தது. 2011ல் இது 1.43 லட்சம் ஆக அதிகரித்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

0 கருத்துரைகள்:
Post a Comment