ராமநாதபுரம் மாவட்டம் : பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக மேம்பாட்டுத் துறை சார்பாக "முழுமையான கல்வி கிராமம் (Sarva Shiksha Gram)" திட்டம் 8.09.12 அன்று ராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கம் கிராமத்தில் துவங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலமாக வாலிநோக்கம் மொத்த கிராமத்தையும் கல்வி வளர்ச்சிக்காக தத்தெடுக்கப்பட்டது. இத்திட்டத்தின் நோக்கம் எந்த ஒரு குழந்தையும் அவர்களது பள்ளிப்படிப்பை இடைநிறுத்தம் செய்து விடக்கூடாது என்பதாகும்.
இதற்காக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை சார்ந்தவர்கள் வீடு வீடாக சென்று கல்வியின் முக்கியத்துவத்தை சிறுவர்களிடமும், அவர்களது தாய், தகப்பனாரிடம் எடுத்துரைத்தனர். கற்றல் குறைபாடு காணப்படும் மாணவர்களுக்கு மாலைநேர பயிற்சி அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுளளது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை சார்ந்த தன்னார்வ தொண்டர்கள் தொடர்ந்து இவர்களை வழிநடத்தி மேல்நிலை கல்வியில் தேர்ச்சி பெறும் வரை பின்தொடர்வது என முடிவு செய்யப்பட்டது.
வாலிநோக்கத்தில் உள்ள அரசு பள்ளியில் மாணவர்கள் 10ம் வகுப்பு வரை மட்டுமே பயிலமுடியும். மேற்படி கல்வி கற்க இவர்கள் சுமார் 12 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்ய வேண்டும். அதற்கு அங்கு போதிய பேருந்து வசதிகள் இல்லாத காரணத்தால், மாணவர்கள் சிலர் கல்வியை இடைநிறுத்தம் செய்யும் நிலை ஏற்படும். மாணவர்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு தமிழக அரசு வாலிநோக்கத்திலேயே வரும் கல்வியாண்டில் மேல்நிலைக்கல்வி பெறுவதற்கான உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.
இந்த நிக்ழ்ச்சிக்கு பாப்புலர் ஃப்ரண்டின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பரக்கத்துல்லா அவர்கள் தலைமை தாங்கினார். பாப்புலர் ஃப்ரண்டின் தமிழ் மாநில சமூக மேம்பாட்டுத்துறையின் ஒருங்கிணைப்பாளர் எம். சாந்த் முஹம்மத் மாலைநேர பயிற்சி வகுப்பிற்கான அலுவலகத்தை திறந்து வைத்தார்.


0 கருத்துரைகள்:
Post a Comment