நாடு முழுவதும் சட்டரீதியாக சுமார் 10 ஆயிரம் தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்படுவதாக மத்திய அரசின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
இந்திய தொலைத்தொடர்பு சட்டத்தின் கீழ், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 4,500-க்கும் மேற்பட்ட தொலைபேசிகளை ஒட்டு கேட்பதற்கு அனுமதி தரப்பட்டுள்ளது. அதற்கு முன்பு 5,000-க்கு மேற்பட்ட தொலைபேசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், 1,200 மின்னஞ்சல்கள் இடைமறித்துப் பார்க்கப்படுகின்றன.
பல்வேறு புலனாய்வு அமைப்புகள், காவல் துறை, ராணுவம் ஆகியவற்றின் கோரிக்கைகளின் அடிப்படையில் இதற்கான அனுமதியை மத்திய உள்துறைச் செயலாளர் வழங்கி உள்ளார். இதுதொடர்பான புள்ளிவிவரம் உயர்நிலைக் குழுவின் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.


0 கருத்துரைகள்:
Post a Comment