கெய்ரோ:கொடுமைக்கு ஆளாக்கப்படும் மியான்மர் முஸ்லிம்களுக்கு ஆதரவாக அவர்களது உரிமைகளை பாதுகாக்க கோரி எகிப்து தலைநகர் கெய்ரோவில் உள்ள பர்மா தூதரகம் முன்னால் லட்சக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட பிரம்மாண்ட போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டம் நோன்பு திறக்கும் வேளையில்(இஃப்தார்) நடத்தப்பட்டதால் ‘தச லட்சங்களின் இஃப்தார் போராட்டம்’ என அழைக்கப்பட்டது.
அதிபர் தேர்தலில் தகுதியிழப்புச் செய்யப்பட்ட அபூஇஸ்மாயீல் உள்பட எதிர்கட்சிகள் இப்போராட்டத்திற்கு தலைமை தாங்கினர். மியான்மர் அரசின் மனிதநேயத்திற்கு எதிரான செயல்பாடுகளை நிறுத்துமாறும், கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட முஸ்லிம்களை பாதுகாக்குமாறும் போராட்டத்தில் கலந்துகொண்டோர் கோரிக்கை விடுத்தனர்.
புத்த மதத்தின் சாமியார்கள் உள்ளிட்டோர் நேரடியாக கூட்டுப் படுகொலைகளில் பங்கேற்பதாகவும், ஆகவே எகிப்து சர்வதேச அளவில் நிர்பந்தம் அளிக்கவேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
அரபு நாடுகளும், உலக முஸ்லிம்களும் இப்பிரச்சனையில் தீவிரமாக தலையிடவேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதுவரை மியான்மரில் 2250 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 3 ஆயிரத்திற்கும் அதிகமானோரை காணவில்லை. 50 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.
0 கருத்துரைகள்:
Post a Comment