பீஜிங்:சீனாவின் வடமேற்கு மாகாணமான ஜின்சியாங்கில் முஸ்லிம்கள் வேதனையுடன் இவ்வாண்டு ரமலானை வரவேற்றுள்ளனர். புண்ணியமிக்க மாதத்தில் மாகாணத்தில் வாழும் முஸ்லிம்கள் நோன்பு நோற்க அரசு தடை விதித்துள்ளது.
ஜின்சியாங்கில் உய்கூர் முஸ்லிம்கள் மீது சீனா அரசு நடத்தி வரும் அரச பயங்கரவாதத்தின் ஒரு பகுதியாக அங்கு அரசு அதிகாரிகளும், 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களும் நோன்பு நோற்க கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
முஸ்லிம்களை ஒடுக்கும் நோக்கத்துடனே கம்யூனிச அரசு நோன்பு நோற்க தடை விதித்துள்ளதாக உய்கூர் முஸ்லிம்கள் குற்றம் சாட்டுகின்றனர். ரமலானில் முஸ்லிம்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என அரசு உத்தரவு வெளியிட்டுள்ளது.
மஸ்ஜிதுக்கு செல்வது உள்பட மதரீதியான அனைத்து செயல்பாடுகளுக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
ஜனநாயக புரட்சிக்கான வழியை தேடும் சீனா மக்களுக்கு, கூடுதல் உத்வேகம் அளிக்கும் வகையில் மட்டுமே அரசு உத்தரவு அமையும் என உலக உய்கூர் காங்கிரஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கம்யூனிச அரசின் மனித உரிமை மீறல்களை கண்டித்து ஏராளமான போராட்டங்கள் நடந்த ஜின்சியாங் பகுதியை அச்சத்துடனே அரசு காண்கிறது என்பதற்கான ஆதாரமே நோன்புக்கு விலக்கு ஆகும்.
0 கருத்துரைகள்:
Post a Comment