Sunday, August 5, 2012

துபாய் திருக்குர்ஆன் ம‌ன‌ன‌ப் போட்டியில் அனைவ‌ரையும் அதிச‌யிக்க‌ வைக்கும் த‌ஜிகிஸ்தான் சிறுவ‌ன்

துபாய்: துபாயில் நடந்து வரும் ச‌ர்வ‌தேச‌ திருக்குர்ஆன் மனனப் போட்டியில் கலந்து கொண்டுள்ள 12 வயது தஜிகிஸ்தான் சிறுவன் அனைவரையும் அதிசயிக்க வைத்துள்ளான்.
துபாய் ச‌ர்வ‌தேச‌ திருக்குர்ஆன் விருது வ‌ழ‌ங்கும் நிக‌ழ்ச்சியையொட்டி ச‌ர்வதேச‌ அள‌விலான‌ திருக்குர்ஆன் ம‌ன‌ன‌ப் போட்டிக‌ள் ந‌டைபெற்று வ‌ருகின்ற‌ன‌. இப்போட்டியில் ப‌ங்கேற்றுள்ள‌ த‌ஜிகிஸ்தானைச் சேர்ந்த‌ லுத்புல்லாஹ் கோலிகோவ் எனும் 12 வ‌ய‌து சிறுவ‌ன் த‌ன‌து திற‌மையினால் அனைவ‌ரையும் அதிச‌யிக்க‌ச் செய்து வ‌ருகிறான்.
திருக்குர்ஆனின் எந்த‌ப் ப‌குதியில் இருந்து எந்த‌ வ‌ச‌ன‌த்தைக் கேட்டாலும் அது எந்த‌ சூராவில் வ‌ருகிற‌து, எத்த‌னையாவ‌து ப‌க்க‌ம், அந்த‌ சூராவில் எத்த‌னை எழுத்துக்க‌ள், வ‌ச‌ன‌ம் இற‌ங்கிய‌ வ‌ர‌லாறு என‌ அனைத்துத் த‌க‌வ‌ல்க‌ளையும் எவ்வித‌ த‌ய‌க்க‌மும், யோச‌னையுமின்றி உட‌னுக்குட‌ன் தெரிவித்து வ‌ருவ‌து நிக‌ழ்ச்சியில் ப‌ங்கேற்றுள்ள‌ ந‌டுவ‌ர்க‌ளை வியக்க வைத்துள்ளது.
அந்த‌ மாண‌வனை ந‌டுவ‌ர்க‌ளும், பார்வையாளர்களும் மனம் மகிழ்ந்து வாழ்த்தின‌ர்.
16வது ஆண்டாக‌ ந‌டைபெற்று வ‌ரும் இந்த‌ ச‌ர்வ‌தேச‌ குர்ஆன் மனனப் போட்டியில் இதுவ‌ரை இப்பொடியொரு திற‌மை மிகுந்த‌ மாண‌வ‌ரை பார்த்த‌தில்லை என‌ இப்போட்டிக்கான‌ ஏற்பாட்டுக் குழுவில் இட‌ம் பெற்றுள்ள‌ ஒரேயொரு இந்தியரான‌ த‌மிழ‌க‌த்தின் ம‌துக்கூரைச் சேர்ந்த‌ நூருல் அமீன் தெரிவித்துள்ளார்.


Tajikistan Boy Stuns Everybody Dubai Quran Recitation

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza