புதுடில்லி: "இந்தியாவில் சட்ட விரோதமான வழிகளில் சம்பாதிக்கப்படும் கறுப்பு பணம், ரியல் எஸ்டேட், தேர்தல் பிரசாரம் உட்பட பல வழிகளில் செலவிடப்படுகிறது' என, அமெரிக்க வெளியுறவுத் துறையின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் சட்ட விரோதமான வழிகளிலும், ஊழல் மூலமும் சம்பாதிக்கப்படும் கறுப்பு பணம், ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்வதற்கும், கல்வித் திட்டங்களும், அறக்கட்டளைகளை துவக்கவும், தேர்தல் பிரசாரத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது.
இந்தியாவின் பொருளாதார நடைமுறைகள், பணம் செலுத்தும் முறைகள், தொடர்ந்து நிகழும் ஊழல்கள், தொல்லை தரும் வரி நிர்வாகம் உட்பட பல விஷயங்கள், இங்கு அதிக அளவில் பொருளாதார ரீதியான குற்றங்கள் நடக்க காரணமாகின்றன.
கடந்த 2010 ஏப்ரல் முதல் 2011 ஏப்ரல் வரை, இந்தியாவுக்கும், மற்ற நாடுகளுக்கும் இடையே நடந்த பண பரிமாற்றங்களில், 20 ஆயிரம் பரிமாற்றங்கள் சந்தேகத்திற்குரியதாக உள்ளன. இந்தப் பணப் பரிமாற்றங்களில், வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள், வீட்டு வசதி நிறுவனங்கள், வங்கிசாரா நிதி நிறுவனங்கள், சீட்டு கம்பெனிகள், கோவில், சர்ச்சுகள் உட்பட அறக்கட்டளைகள், லாப நோக்கில்லாமல் செயல்படும் நிறுவனங்கள் மற்றும் பங்குச் சந்தை தரகர்கள் ஆகியோர் இதில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 கருத்துரைகள்:
Post a Comment