Sunday, August 5, 2012

பட்டினியால் நோன்பு நோற்கும் முஸ்லிம்களும், நாற்று நட கிளம்பிய போடோக்களும்!

Decoding the Assam riots
கொக்ராஜர்:புனித ரமலானின் துவக்கத்தில் இருந்து போடோ பிரிவினைவாத பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட கலவரத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் அகதிகள் முகாமில் அபயம் தேடியுள்ளனர்.
கொக்ராஜர் மாவட்டத்தில் இருந்து துப்ரி மாவட்டத்தில் உள்ள அகதி முகாம்களுக்கு 2 லட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் அபயம் தேடிச் சென்றுள்ளனர்.
பிரதமர், மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் உள்ளிட்ட வி.ஐ.பிக்கள் வந்து சென்ற புட்கான் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள அகதிகள் முகாமிற்கு அருகில் உள்ளது போரோபித்யா பள்ளிக்கூடம். இங்கு 1266 முஸ்லிம்கள் தங்கியுள்ளனர். இங்கு மாலை 6.10க்கு நோன்பு திறக்கும் இஃப்தார் நேரமாகும். ஆனால், முஸ்லிம்கள் தங்கியுள்ள அப்பள்ளிக்கூடத்தில் இஃப்தார் நேரத்தில் உணவு தயாராவதற்கான எவ்வித பரபரப்பும் காணப்படவில்லை. உணவு தயாரான பாத்திரங்கள் இல்லை. ஆனால், பள்ளிக்கூட திண்ணையில் பசியால் வாடி சுருண்டு கிடக்கும் குழந்தைகளைத்தான் காணமுடிந்தது. பள்ளிக்கூட முற்றத்தில் உள்ள விறகு எரியும் அடுப்பில் வைக்கப்பட்டுள்ள பாத்திரத்தில் தண்ணீர் மட்டும் கொதிக்கிறது.

பிரதமர் வந்து சென்ற புட்கான் பள்ளிக்கூடத்தில் அளிக்கப்பட்ட அரிசியில் இருந்து ஏதேனும் கிடைக்குமா? என கேட்டு ஆளை அனுப்பியுள்ளதாக கூறுகிறார் அகதிகள் முகாமிற்கு பொறுப்பு வகிக்கும் அன்வர் ஹுஸைன்.
ஒரு நாளுக்கு முன்பாக புட்கான் பள்ளிக்கூடத்தில் இருந்து வேகவைத்த கிச்சடி கிடைத்தது. இன்று சிறிது அரிசியும், பருப்பும் கிடைத்தால் குழந்தைகளின் பசியை போக்கலாம் என கூறும் அன்வர் ஹுஸைனிடம், எதுவும் கிடைக்காவிட்டால் என்ன செய்வீர்கள்? என கேள்வி எழுப்பிய பொழுது, “நேற்று போலவே இன்றும் பட்டினிதான்” என பதில் அளித்தார்.
ரமலான் 2-வது பத்து துவங்கிய பொழுதும் இதுவரை எவரும் ஸஹ்ர்(நோன்புக்காக அதிகாலையில் உண்பது) சாப்பிட்டு நோன்பு பிடிக்கவில்லை எனவும், பசியை போக்கும் அளவுக்கு இஃப்தாரும்(நோன்பு திறப்பது) அமையவில்லை என்றும் அன்வர் ஹுஸைன் கூறுகிறார். பட்டினியை ஸஹ்ராக மாற்றி பட்டினியால் நோன்பு திறக்கும் சூழல் உருவாகியுள்ளதாக அன்வர் ஹுஸைன் மேலும் கூறுகிறார்.
அகதிகள் முகாமில் உள்ள முஸ்லிம்கள் பட்டினியால் வாடும் பொழுது, கொக்ராஜர் காமர்ஸ் கல்லூரி மற்றும் டிட்டா கிரி மேல்நிலைப்பள்ளியில் தங்கியிருந்த போடோக்கள் தங்களது கிராமங்களுக்கு திரும்பியுள்ளனர். அங்குள்ள பரந்து விரிந்த வயல்களில் உழுது பண்படுத்தி நாற்று நடத் துவங்கியுள்ளனர்.
அகதிகளாக ஊடகங்களில் அதிகமாக சித்தரிக்கப்பட்ட போடோக்கள் பயமின்றி கிராமங்களுக்கு திரும்பி வயல்களில் நாற்று நட கிளம்பிய வேளையில் முஸ்லிம்கள் பட்டினியாக அகதிகள் முகாமின் குறுகிய வகுப்பறைகளில் பட்டினியால் வாடுகின்றனர்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza