மெஹ்ஸானா(குஜராத்):2002-ஆம் ஆண்டு குஜராத் முஸ்லிம் இனப்படுகொலையின் போது ஹிந்துத்துவா பயங்கரவாதிகளால் நிகழ்த்தப்பட்ட தீப்தா தர்வாஸா கூட்டுப் படுகொலை வழக்கில் குற்றவாளிகளாக கண்டறிந்த 21 பேருக்கு மெஹ்ஸானா நீதிமன்றம் ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரிக்கு ஓர் ஆண்டு சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. போதிய ஆதாரம் இல்லாத காரணத்தால் 61 பேர் விடுதலைச் செய்யப்பட்டனர்.
ஒன்பது பெண்களும், குழந்தைகளும் உள்பட ஒரு குடும்பத்தில் 11 பேரை தீப்தா தர்வாஸாவில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் 2002 பிப்ரவரி 28-ஆம் தேதி கொடூரமாக கொலைச்செய்தனர். முன்னாள் பா.ஜ.க எம்.எல்.ஏ பிரஹலாத் கோஸா, முன்னாள் மாநகராட்சி தலைவர் தயாபாயி பட்டேல் ஆகியோர் உள்பட 83 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. பிரஹலாதும், தயாபாயும் விடுவிக்கப்பட்டவர்களில் அடங்குவர்.
ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட 21 பேர்கள் மீது கொலை, கிரிமினல் சதித்திட்டம் உள்பட பல்வேறு பிரிவுகளை நீக்கிய நீதிபதி எஸ்.சி.ஸ்ரீவஸ்தவா, கொலை முயற்சி, ஆயுதம் கைவசம் வைத்திருத்தல், கலவரத்தை உருவாக்குதல் ஆகிய குற்றங்களின் அடிப்படையில் தண்டனை வழங்கியுள்ளார்.
ஹிந்துத்துவா பயங்கரவாதிகளுக்கு உதவிய முன்னாள் போலீஸ் இன்ஸ்பெக்டர் எம்.கே.பட்டேலிற்கு ஒரு வருடம் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 150 ரூபாய்(?) அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு பிரிவுகளில் ஆறுபேருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. இவை அனைத்தையும் ஒன்றாக அனுபவித்தால் போதும்.
உச்சநீதிமன்ற உத்தரவின்பேரில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தும் ஒன்பது குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை வழக்குகளில் ஒன்றுதான் தீப்தா தர்வாஸா கூட்டுப்படுகொலை வழக்கு ஆகும்.
0 கருத்துரைகள்:
Post a Comment