புதுடெல்லி:முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் மீண்டும் அமெரிக்காவில் அவமானப்படுத்தப்பட்ட சம்பவம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்கா விமான நிலையத்தில் வைத்து அதிகாரிகள் அப்துல் கலாமிடம் பரிசோதனை நடத்தியது பெரும் விவாதத்தை கிளப்பியிருந்தது. இந்நிலையில் கடந்த செப்டம்பர் 29-ஆம் தேதி நியூயார்க்கில் ஜான் எஃப்.கென்னடி விமானநிலையத்தில் வைத்து அப்துல் கலாமின் ஷூ மற்றும் கோட்டை களற்றி விட்டு அவரது உடலை சோதனை நடத்தியுள்ளனர் விமான நிலைய அதிகாரிகள். விமானத்திற்கு உள்ளேயும், வெளியேயும் இச்சோதனை நடத்தப்பட்டுள்ளது.
வெடிப்பொருட்கள் வைத்திருப்பதாக சந்தேகிக்கப்படுவோர்களிடம்தன் இத்தகைய சோதனை நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. செப்டம்பர்29-ஆம் தேதி நடந்த சம்பவம் தற்பொழுதுதான் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் முன்னாள் அதிபர்களுக்கு ராஜ கம்பீர மரியாதைகள் இந்தியாவில் அளிக்கப்படும் வேளையில் இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவருக்கு இரண்டாவது முறையாக அவமானம் இழைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கைப்பாவையாக மாறிவிட்ட இந்திய அரசு அதிகபட்சமாக கண்டனம் தெரிவிப்பதோடு வாயை மூடிக்கொள்ளும் என கருதப்படுகிறது.
0 கருத்துரைகள்:
Post a Comment