நாக்பூர்:ஆர்.எஸ்.எஸ் தொடர்பு குற்றம் சாட்டி ஹஸாரே குழுவைச்சார்ந்த அரவிந்த் கேஜ்ரிவாலின் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் மீது கெஜ்ரிவாலின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர். ’கந்தநாடு சன்ஸ்தா’ என்ற உள்ளூர் அமைப்பைச் சார்ந்த 20 உறுப்பினர்கள் கெஜ்ரிவால் உரைநிகழ்த்த எதிர்ப்பு தெரிவித்தனர்.அவர்கள் கெஜ்ரிவாலுக்கு கறுப்புக்கொடியை காண்பித்தனர்.
அவருக்கு எதிரான வாசகங்களை எழுதிய அட்டைகளை ஏந்தியிருந்தனர். ஆனால் கெஜ்ரிவாலின் உரை முடிந்தவுடன் அவரது ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தவர்கள் மீது தாக்குதலை கட்டவிழ்த்துவிட்டனர். தனது உரைக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களை தாக்கியதற்கு கெஜ்ரிவால் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கண்டனம் தெரிவித்தார்.
0 கருத்துரைகள்:
Post a Comment