புதுடெல்லி:இந்தியாவில் நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டு ஐந்து வயதிற்கு கீழ் உள்ள 3 லட்சத்து எழுபதினாயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் ஒவ்வொரு ஆண்டும் மரணிப்பதாக கூறும் ஆய்வறிக்கையை லான்செட் என்ற மருத்துவ மாத இதழ் வெளியிட்டுள்ளது. இதில் ஏழு சதவீத மரணமும் காய்ச்சலை தொடர்ந்து வரும் நிம்மோனியா நோயால் என தெரியவந்துள்ளது.
நிம்மோனியா நோயால் பாதிக்கப்பட்ட மிக அதிகமான குழந்தைகள் இந்தியாவில்தான் மரணிக்கின்றனர். சர்வதேச அளவில் நோயினால் 9 கோடி குழந்தைகள் ஒவ்வொரு ஆண்டும் மரணிக்கின்றனர். எடின் பரோ பல்கலைக்கழகம் இதுத்தொடர்பான ஆய்வை நடத்தியுள்ளது.
ஆல் இந்தியா மெடிக்கல் சயின்ஸ், இந்தியா கவுன்சில் ஃபார் மெடிக்கல் ரிசர்ச், ஆகிய நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் 1995-ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. 2008 ஆம் ஆண்டு ஐந்து வயதிற்கு கீழே உள்ள 1,11,500 குழந்தைகள் காய்ச்சல நோயினால் மரணித்துள்ளதாக ஆய்வு கூறுகிறது. இதில் 99 சதவீதமும் வளர்ந்துவரும் நாடுகளிலாகும். சளி மூலம் நுரையீரலில் ஏற்படும் கிருமி தாக்குதல் மரணத்திற்கு காரணமாகிறது என எடின்பரோ செண்டர் ஃபார் பாப்புலேசன் ஹெல்த் சயின்ஸின் டாக்டர் ஹரீஷ் நாயர் கூறுகிறார்.
முன்பு இந்த நோய் வயதுக்கு வந்தவர்களிடம் மட்டுமே ஏற்படும் என கருதப்பட்டது. இதன் காரணமாக குழந்தைகளுக்கு இந்நோய் வராமல் தடுக்கு நடவடிக்கைகள் சுகாதார துறை பணியாளர்களால் மேற்கொள்ளப்படவில்லை. சரியான முறையில் தடுப்பூசி, ஆண்டி பயோட்டிக் மருந்து ஆகியவற்றை அளிப்பதன் மூலம் இந்நோயை குணப்படுத்தலாம் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
0 கருத்துரைகள்:
Post a Comment