Tuesday, September 20, 2011

கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட SDPI முழு ஆதரவு

2011-09-12 13_36_10
திருநெல்வேலி :கூடங்குளம் அணுமின் நிலையத்தை உடனே மூட கோரி சுமார் 127 பேர்  கூடங்குளம் அருகில் இடிந்த கரையில் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஊர் பொது மக்கள் 5000 பேர் ஆதரவு தெரிவித்து அவர்களுடன் இருந்து வருகின்றனர் அவர்களை ஆதரித்து SDPI மாநில தலைவர் தெஹ்லான் பாக்கவி தலைமையில் நிர்வாக குழு சென்றது. இந்த குழுவை அங்குள்ள மக்கள் மிகுந்த உற்சாகத்தோடு வரவேற்றனர்.

பிறகு அங்கு கூடங்குளம் அணுமின் நிலையத்தின் பாதிப்பு குறித்தும் , அதனால் ஏற்பட கூடிய விளைவுகள் பற்றியும்,மற்ற நாடுகள் எந்த அளவிற்கு அதை எதிர்கின்றனர் என்பதை பற்றியும் தெளிவாக விளக்கவுரை ஆற்றினர். இந்த நிகழ்ச்சியின் போது SDPI மாவட்ட தலைவர் சாகுல் ஹமீத் உஸ்மானி. மாவட்ட பொது செயலாளர் ஹயாத் முஹம்மத், நான்குநேரி தொகுதி தலைவர் தாஜுதீன்,தொகுதி செயலாளர் ஜாகிர் ஹுசைன் ,நகர தலைவர் அய்யூப் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza