Tuesday, September 20, 2011

தனியார் ஹஜ் நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஹஜ் கோட்டாக்களுக்கு மும்பை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை

mumbai highcourt
மும்பை:தனியார் ஹஜ் நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஹஜ் கோட்டாக்களுக்கு செப்.23 ஆம் தேதி வரையில் மும்பை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. மேலும் இதுக் குறித்து பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது என்று வழக்குறைஞர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் வழக்கறிஞர் ச.சேத்னா, அரசாங்கம் பதில் அளிப்பதற்கு சற்று அவகாசம் கேட்டுள்ளார்.

வெளியுறவு அமைச்சகம் கடைசி நிமிடத்தில் விதிகளை மாற்றி தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கோட்டாக்களை பிடுங்கி புதிய ஹஜ் ஆப்பரேட்டர்களுக்கு கொடுத்துள்ளது என்று ஹஜ் டூர் ஆப்பரேட்டர்களின் வழக்கறிஞர் அஃப்தாப் டைமண்ட்வாலா தெரிவித்துள்ளார் இதுத்தொடர்பாக தொடுக்கப்பட்டுள்ள வழக்கில்தான் மும்பை நீதிமன்றம் இவ்வுத்தரவை பிறப்பித்துள்ளது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza