அமெரிக்க நாடாளுமன்ற ஆய்வுச் சேவை மன்ற உறுப்பினர்களுக்காக, இந்திய அரசியல் சூழல் குறித்து 94 பக்க அறிக்கையொன்றைத் தயாரித்துள்ளது. உறுப்பினர்களின் கவனத்துக்காக மட்டும் தயாரிக்கப்படும், இது போன்ற குறிப்பறிக்கைகள், வெளியில் உள்ள எவருக்கும் தரப்படுவதில்லை.
ஆயினும் செப்டம்பர் 1-ம் தேதி வெளியான இந்த அறிக்கை, அமெரிக்க விஞ்ஞானிகள் கூட்டமைப்பு மூலம், பொதுமக்கள் பார்வைக்கு வந்துள்ளது. இந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது; குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, செயலாற்றல் மிக்க நிர்வாகத்துக்கு, குஜராத் சிறந்த உதாரணமாக உள்ளது.
ஊழலைக் கட்டுப்படுத்துவதிலும், அரசு நிர்வாகத்தில் தாமதத்தை ஒழிப்பதிலும் வெற்றி பெற்றுள்ளார்.
தனது மாநிலத்தில் நவீன சாலைகள், மின் உற்பத்திக் கட்டமைப்பு ஆகியவற்றில், ஏராளமான முதலீடுகள் வரும் வகையில் நிர்வாகம் செலுத்தி வருகிறார்.
குஜராத்தின் பொருளாதார வளர்ச்சி கடந்த சில ஆண்டுகளாக, 11 சதவீதமாக உள்ளது. இது இந்தியாவின் பொருளாதாரத்தையே செலுத்துகிறது. ஜெனரல் மோட்டார்ஸ், மிட்ஸூபிஷி போன்ற சர்வதேச நிறுவனங்கள் இங்கு முதலீடு செய்துள்ளன.
இந்திய மக்கள்தொகையில் 5 சதவீதமுள்ள குஜராத், நாட்டின் ஏற்றுமதிகளில் 20 சதவீதப் பங்கை அளிக்கிறது.
குஜராத்துக்கு அடுத்தபடியாக பிகார் மாநிலத்தில், நல்ல நிர்வாகம் நடப்பதாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

0 கருத்துரைகள்:
Post a Comment