Sunday, July 3, 2011

ஐரோப்பாவை தாக்குவோம்-முஅம்மர் கத்தாஃபி எச்சரிக்கை

Muammar+Gaddafi
திரிபோலி:லிபியாவில் மேற்கத்திய படைகளின் தாக்குதல்களுக்கு எதிர்விளைவுகள் ஏற்படும் என ஐரோப்பாவிற்கு கத்தாஃபி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நேட்டோவின் தாக்குதலை நிறுத்தாவிட்டால், ஐரோப்பாவில் வீடுகள், அரசு அலுவலகங்கள், குடும்பங்கள் ஆகியவற்றை குறிவைத்து லிபியாவின் ராணுவம் தாக்குதல் நடத்தும் என அவர் தெரிவித்தார்.லிபியாவில் எதிர்ப்பாளர்களின் ராணுவத்தினருக்கு பிரான்சு ஆயுதம் வழங்கியதாக வெளியான செய்தியை தொடர்ந்து கத்தாஃபி இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

லிபியாவின் தலைநகரில் க்ரீன் சதுக்கத்தில் திரண்டிருந்த கத்தாஃபியின் ஆதரவாளர்கள் மத்தியில் அவருடைய உரை ஒலிபரப்பப்பட்டது. ஐரோப்பியர்கள் இந்த நாட்டின் மீது தாக்குதல் நடத்துவது போல ஒருநாள் லிபியா மக்கள் ஐரோப்பாவில் தாக்குதல் நடத்துவார்கள் என கத்தாஃபி தெரிவித்தார். ஐரோப்பாவிற்கு வருவதற்கு நாங்கள் தீர்மானித்தால் எளிதாக வருவோம்.அத்தகையதொரு பேரழிவு சூழல் ஏற்படும் முன்பு லிபியாவிலிருந்து வெளியேற கோரிக்கை விடுக்கிறோம் என கத்தாஃபி தெரிவித்தார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza